சாதாரணமாக பனைமரம் என்றாலே நுங்கு, பனங்கிழங்கு, போன்றவை மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் பனங்கற்கண்டு என்ற மருத்துவ குனம் நிறைந்த ஒரு அரிய பொருள் கிடைப்பதென்பது பலரும் அரியாது தான்.
பனங்கற்கண்டு உருவாகும் விதம் :
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பனை வெல்லத்தில் இருந்து பனங்கற்கண்டு உருவாக்கப்படுகிறது.
பனங்கற்கண்டில் உள்ள இயர்க்கை சத்துக்கள்:
சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது .புரதம், கொழுப்பு , தாதுக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச்சத்து.
பனங்கற்கண்டின் பயன்கள் :
- மழைக்காலங்களில் ஏற்படும் ஜலதோஷங்களை தவிர்க்க பணங்கற்கண்டு மிகப்பெரிய வரமாக அமைகிறது. மேலும் நெஞ்சு வலி இருமல் போன்றவற்றிலிருந்தும் நம்மை பாதுக்காக்கிறது.
- வாயிலிருந்து வரும் துர்நாற்றங்களை தவிர்க்கவும் இது உதவுகிறது.
- அரை ஸ்பூன் பசுமாட்டின் நெய்யுடன் அரை டேபிள்ஸ்பூன் பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலிகள் முற்றிலுமாக நீங்கும்.
- இதை நெய்யுடன் கலந்து உண்பதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்கள் அதிகரிக்கின்றன.
- தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு பனங்கற்கண்டுடன் பாதாம் சேர்த்து உன்பதன் மூலமாக கண்களின் பார்வை திறனை அதிகரிப்பதோடு மட்டுமின்றி குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயச் சாறையும் ஒரு டேபிள் பனங்கற்கண்டையும் சேர்த்து உண்டு வர சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி சிறுநீரகங்கள் சீராக செயல்படும்.
- கருவுற்ற பெண்களுக்கு பனங்கற்கண்டு மிகப்பெரிய வரமாக அமைகிறது ஏனெனில் இதன் மூலமாக கர்ப்பத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வயிற்று புண் மற்றும் மலச்சிக்கல் போன்றவை குணமாகிறது. இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது.
- வைரஸ் சம்பந்தமான வியாதிகள் மற்றும் நுரையீரலில் ஏற்படும் வியாதிகள் போன்றவற்றை பனங்கற்கண்டு சிறப்பான முறையில் குணப்படுத்துகிறது.
- மழை காலங்களில் மட்டுமின்றி வெயில் காலங்களிலும் கூட உடலில் ஏற்படும் உஷ்ணத்தை தவிர்க்க இது உதவுகிறது.
பனங்கற்கண்டை யாராரெல்லாம் பயன்படுத்தலாம்??
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
பனங்கற்கண்டை எப்படி பயன்படுத்தலாம் ??
பனங்கற்கண்டை நேரடியாகவோ அல்லது நெய்யுடன் அல்லது பாலிலோ சேர்த்து பயன்படுத்தலாம்.
Originally posted 2019-11-29 14:55:51.
Hi. I’m glad he found standardcoldpressedoil.com website, I really like it, the article
is very useful and I shared it!
Thank you! you can read our other blogs.