எள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள்.
மரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கும். வாசனையும் மாறாமல் இருக்கும்.
இந்த எண்ணெய் நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது.
இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும்.
…..
1. மரச்செக்கு எண்ணெயின் ஊட்டசத்துக்கள்
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த கடலை எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.
இதில் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான
- புரோட்டீன்கள்
- வைட்டமின்கள்
- தாதுப்பொருள்கள்
- நார்ச்சத்துக்கள்
- குளோரோபில்
- கால்சியம்
- மெக்னீசியம்
- காப்பர்
- இரும்பு
- பாஸ்பரஸ்
- வைட்டமின் ” இ ”
போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..
இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.
இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.
அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக “நல்ல எண்ணெய்” என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை ” Queen of Oil ” என்று அழைக்கிறர்கள்.
…..
3. மருத்துவ குணம் கொண்ட மரச்செக்கு எண்ணெய்!
மருத்துவ குணம் கொண்ட மரச்செக்கு எண்ணெய்!
ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெய்!
மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், மனித உடலுக்கு மிகவும் நன்மையானது.
மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Poly Unsaturated Fatty Acid) – நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக உள்ளது. எனவே இவை எளிதில் ஜீரணமாகும்.
ரோட்டரி செக்கில் (Rotary) ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக சூடு ஆவதால் PSFA (Poly Saturated Fatty Acid) ஆக மாறி பிரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals) தோற்றுவித்து இரத்தத்தை அசுத்தமாக்கி கெட்ட கொலஸ்ட்ராலை கூட்டி இதய இரத்தத்தை தடை செய்கிறது.
பாரம்பரிய உணவு வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்தது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( Room Temperature) மட்டுமே வரும். இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை.
இதுவே மரச்செக்கு எண்ணெய் நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
இந்த எண்ணெய் பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும். அடர்த்தி மிகுந்தது.
…..
4. Budget Friendly – மரச்செக்கு எண்ணெய்
மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் ரீஃபைன்ட் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.
பொறிப்பதற்கு ஏற்றது.
செயற்கை சாராம்சம் ஊட்டப்படாதது.
மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் விலை சற்று அதிகம் தான். உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும்.
மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.
Originally posted 2019-08-26 16:41:41.