சிக்கன், மட்டன் பிரியாணியை விரும்பி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கு கத்திரிக்காய் கிரேவியும் மிகப்பெரிய வரம், அப்படிப்பட்ட கத்திரிக்கா கிரேவியை சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வைப்பது எப்படி என்பதை காண்போம்.
சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் – 5
- வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
- மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன்
- சிக்கன் மசாலா – தேவையான அளவு
- தனியா தூள் – 2 ஸ்பூன்
- தயிர் – 2 ஸ்பூன்
- தேங்காய் பால் – ஒரு கப்
- கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய், புதினா – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு.
…..
கத்தரிக்காய் கிரேவி செய்யும் முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்பு வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் நாம் வைத்துள்ள தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். தயிர் தேங்காய் பால், மற்றும் உப்பு, ஆகியவற்றை சேர்த்து பின்பு 20 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- 20 நிமிடங்கள் பிறகு கத்திரிக்காய் சேர்த்து வதக்கிவிடவும். பின் குழம்பு பதத்தில் வரும்போது நன்றாக சுருங்க வைக்க வேண்டும்.
- இப்போது ருசியான கத்தரிக்காய் கிரேவி தயார்!
…..
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-09 18:07:22.