அத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் .
அத்திப்பழச்சாறு உருவாகும் விதம்:
அத்திப்பழத்தில் இருந்து அத்திப்பழ சாறு உருவாக்கப்படுகிறது.
அத்திப்பழ சாறில் உள்ள இயற்கை சத்துக்கள்:
அத்திப்பழ சாறில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்களும், பீனல், ஒமேகா, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன.
…..
அத்திப்பழ சாறின் நன்மைகள்
- அத்திப்பழம் சிறுநீரக நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது.
- அத்திப்பழமானது அஜீரண கோளாறுகளை விலக்கி உணவு ஜீரணமடையவும் மேலும் மூலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்கிறது.
- அத்திப் பழத்தை இரவில் பாலில் ஊறவைத்து காலையில் உட்கொள்வதன் மூலமாக ஆண்மைக் கோளாறுகள் சரி செய்யப்படுகிறது.
- நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உண்பதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
- அத்திப்பழம் ஆனது பெருங்குடல் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.
- இவை இதய நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணியாகவும் உள்ளது.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை மலத்தின் மூலமாக வெளியேற்ற அத்திப்பழமானது உதவுகிறது.
- உடல் எடை குறையவும் உடல் எடை சமமான அளவு கட்டுக்குள் வைக்கவும் இந்த அத்திப்பழமானது உதவிபுரிகிறது.
…..
அத்திப்பழத்தை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் ?
- அத்திப்பழ சாறிணை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
- கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்ப காலங்களில் உடல் எடையை பராமரிக்க அத்திப்பழத்தை பயன்படுத்தலாம்.
சிலருக்கு அத்திப்பழத்தை உண்பதற்கு ஏதுவாக அமையாது ஆகையால் இதனை அத்திப்பழம் மூலமாக அத்திப் பழ சாறு பயன்படுத்துவது குளிர்பானத்தை போன்ற அனுபவத்தையும் உண்டாக்குகிறது.
Originally posted 2019-12-09 12:41:57.