பொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு, குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக் கொடுப்பது வழக்கம், அப்படிப்பட்ட துத்தி மூலிகையின் மேலும் சில மருத்துவ குணங்கள் என்னென்ன?? காண்போம்.
துத்திக் மூலிகைச்சாறு உருவாகும் விதம்:
துத்தி மூலிகைச்சாறு ஆனது சுத்தகரிக்கப்பட்ட துத்தி இலைகளிலிருந்து சாறு பிழியப்பட்டு உருவாக்கப்படுகிறது.
…..
துத்தி மூலிகை சாறில் உள்ள இயற்கை சத்துக்கள்:
இதில் வைட்டமின் ஏ, புரோட்டீன், வைட்டமின் சி ,கால்சியம், அயர்ன், போன்ற முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
…..
துத்தி மூலிகைச் சாறில் உள்ள பயன்கள்:
- ஆண்களுக்கு ஆண்மை கோளாறு நீங்கி குழந்தை பிறப்பதில் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது.
- மூலநோய் உள்ளவர்கள் காலை, மாலை என இரு வேளை இதை உண்டு வர மூல நோய் விரைவில் குணமடைகிறது.
- திடீரென மாறுபடும் பருவநிலை காரணமாக தோல்வியாதிகள் பலருக்கு அதிக அளவில் ஏற்படுகிறது அதை தடுக்க இந்த துத்தியானது மிகச் சிறந்த மூலிகையாக அமைகிறது.
- மாறுபட்ட உணவுகளின் காரணமாக ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிற்றுப்போக்கு களை விரைவில் சரி செய்வதோடு மட்டுமின்றி அவை மீண்டும் ஏற்படாத வண்ணமும் பாதுகாப்பாக அமைகிறதுகுழந்தைகள் மிட்டாய்களை அதிகம் உண்பதால் வயிற்றில் பூச்சி ஏற்படுகிறது அதை தடுக்கவும் இந்த மூலிகையானது மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது.
- உடலில் பூச்சிகளால் ஏற்படும் புண் மற்றும் வீக்கம் போன்றவற்றை தடுப்பதற்கு துத்தி மூலிகை சிறந்த மூலிகையாக திகழ்கிறது.
- பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பது மட்டுமின்றி பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது.
- மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் கோளாறுகள் போன்றவற்றை தீர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது.
…..
துத்தி மூலிகைச் சாறை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
மூலிகைச்சாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம்.
…..
துத்தி மூலிகை சாறை எவ்வாறு பயன்படுத்தலாம்?
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்கு முன்பும் இந்த துத்தி மூலிகைச் சாறை ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் சேர்த்து வாயில் உமிழ்நீருடன் விழுங்க வேண்டும்.
Originally posted 2019-12-09 12:50:33.