இன்றளவும் தேங்காய் என்றதும் பலரது நாவில் தேங்காய் பருப்பி எனப்படும் தேங்காய் மிட்டாய் தான் நினைவில் வரும் அத்தகைய தேங்காய் மிட்டாய் சுவையானதாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அமையும் வகையில் இருந்தால் தேங்காய் பிரியர்களுக்கு இது அமிர்தமாகத்தான் விளங்கும்.
தேங்காய் மிட்டாய் உருவாகும் விதம்
சுத்தமான தரம் உயர்ந்த தேங்காயை நன்றாக அரைத்து அதிலிருந்து தேங்காய் மிட்டாய் உருவாக்கப்படுகிறது.
தேங்காயில் உள்ள இயற்கை சத்துக்கள்
தேங்காயில் காப்ரிக் ஆசிட் மற்றும் லாரிக் ஆசிட் மற்றும் ஃபேட்டி ஆசிட் போன்ற நவீன வகையான ஆசிட் வகைகள் உள்ளன .மேலும் வைட்டமின் சி , பி காம்ப்ளெக்ஸ் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, புரதச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன.
தேங்காய் மிட்டாய் மருத்துவ பயன்கள்
- பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் பிரச்சினைகளிலிருந்து இது தீர்வு தருகிறது.
- தேங்காய் மிட்டாய் உண்பதன் மூலமாக தோல் வியாதிகள் விரைவில் குனமடைகிறது.
தேங்காயில் உள்ள இயற்கை சத்துக்கள்
- துரித உணவுகளால் சிலநேரம் அஜீரண கோளாறு ஏற்படும்போது இந்த தேங்காய் மிட்டாயை உட்கொள்ளுவதால் உடனே அஜீரண பிரச்சினையானது தீர்க்கப்படுகிறது.
- இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யும் பணியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
- இந்த தேங்காய் மிட்டாய் குழந்தைகள் உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
- விரைவில் முதுமை ஏற்படுவதை தடுப்பதோடு மட்டுமின்றி தைராய்டு பிரச்சினைகளையும் விரைவில் சரி செய்கிறது.
இதை யார் யாரெல்லாம் உட்கொள்ளலாம் ?
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வரம்பின்றி உட்கொள்ளலாம்.
அளவோடு உட்கொள்ளுதல் நலம்!
Originally posted 2019-11-28 11:32:51.