நெத்திலி மீன் குழம்பு செய்யும் முறை

4 sec read

நெத்திலி மீன் குழம்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு அப்படிப்பட்ட சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை காண்போம்.

நெத்திலி மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

 • நெத்திலி மீன் – ஒரு கிலோ
 • தக்காளி – 8
 • சிறிய வெங்காயம் – 300 கிராம்
 • மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 2
 • தனியா தூள் – 3 டேபிள்ஸ்பூன்
 • இஞ்சி – இரண்டு பெரிய துண்டுகள்
 • பூண்டு – 9 பல்
 • தேங்காய் பால் – 2 கப்
 • வெந்தயம் – 2 டீஸ்பூன்
 • நல்லெண்ணெய் – தேவையான அளவு
 • கொத்தமல்லி – தேவையான அளவு
 • உப்பு – தேவையான அளவு
 • சோம்பு – 2 டீஸ்பூன்
 • புளி – தேவையான அளவு

நெத்திலி மீன் குழம்பு செய்யும் முறை:

 • சுத்தம் செய்த நெத்திலி மீனில் லேசாக மஞ்சள் தூள் உப்பு தூவி 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்
 • வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நன்றாக நறுக்கவும் மேலும் இஞ்சி பூண்டையும் விழுதாக அரைக்கவும்.
 • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு ஆகியவற்றை தாளிக்கவும் பின்பு நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
 • இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளி குழம்பினை ஊற்றவும் அதில் மஞ்சள் தனியா தூள் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
 • பின் தேவையான அளவு தேங்காய்ப்பால் சேர்த்து சற்று நேரம் கொதிக்க விட்டு பின் மீனை சேர்க்கவும்.
 • மீன் உடையாத வண்ணம் இரண்டு முதல் மூன்று கொதிநிலையில் மீன் குழம்பினை இறக்கவேண்டும். இறக்குவதற்கு முன்பு அதில் லேசாக புதினாவை சேர்க்க வேண்டும்.
 • இறுதியாக மீன் குழம்பினை இறக்கும்போது சிறிதளவு கொத்தமல்லியை தூவி பின்பு பரிமாறலாம்.
 • இப்போது சுவையான நெத்திலி மீன் குழம்பு ரெடி.

பெரும்பாலும் எண்ணெய்களில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்தது.

மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *