கடலை மிட்டாய் செய்முறையும், அற்புதமான பயன்களும்

6 sec read

peanut indian chikki kozinaki plate white background 158417 580

கடலை மிட்டாய்!!

இது “ஏழைகளின் பாதாம்” என்று அழைக்கப்படுகிறது.மேலும்,
இது பாதாம், பிஸ்தா, முந்திரியை விட சத்துக்கள் நிறைந்தது, ஊட்டச்சத்து மிக்கது என ஆய்வுகளால் உணர்த்தப்படுகிறது.

நாகரீக உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், நாம் இது போன்ற பலவற்றை மறந்து வருகிறோம்.

மறந்து போன நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிலக்கடலை நமது முக்கிய எண்ணெய் வித்துக்களில் ஒன்று. நிலக்கடலையை வேகவைத்தோ வறுத்தோ சாப்பிடலாம்.

அதுபோல நிலக்கடலை உடன் வெல்லம் சேர்த்து செய்து சாப்பிடுவதற்கு பெயர். ” கடலைமிட்டாய் ” என்று அழைக்கப்படுகிறது.

…..

1. கடலை மிட்டாய் செய்முறை:

தேவையான பொருட்கள்;

 • பக்குவமாக வறுக்கப்பட்ட நிலக்கடலை – 100 கிராம்
 • சுத்தமான வெல்லம் – அரை கிலோ
 • தேவையான அளவு இஞ்சி துருவலும் சாரும் சிறிதளவு மட்டுமே
 • கற்கண்டு, ஏலக்காய் தூள் தேவையான அளவு

தயாரிப்பு முறை:

 • முதலில் தோல் நீக்கப்பட்ட கடலையை கடலைப்பருப்பை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • பிறகு, கட்டியாக இருக்கக்கூடிய கூடிய வெல்லத்தை வாணலியில் இட்டு மிதமான சூட்டில் வெல்லமானது, பாகு ஆகும் வரைகாய்ச்சவேண்டும்.
 • ( இதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்துவதை விட விறகு அடுப்பு அல்லது காய்ந்த சருகு அடுப்பு பயன்படுத்துவது சாலச்சிறந்தது. இவ்வகையான அடுப்புகள் மிதமான சூட்டில் பக்குவமாக நமக்கு தேவையான ருசியுடன் சமைத்து கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. நமது பாரம்பரிய பயன்பாடும் இதுதான்.
 • நமது பண்டைய பாரம்பரிய பயன்பாட்டுடன் கூடிய அடுப்பு வகைகள் ஆனது, நமது இனிய கலாச்சாரத்துடன், ருசியையும் சேர்த்து அதிகப்படுத்தும் வகையைச் சார்ந்தது. )
 • எனவே, வெல்லத்தை மிதமான சூட்டில் பாகு ஆகும் வரை காய்ச்சி, அதை ஆற வைக்க வேண்டும். இது முதன்முறை.
 • ஆறிய பிறகு, மீண்டும், இரண்டாவது முறையாக மிதமான வெப்பத்தில் காய்ச்ச வேண்டும். இப்போது சிறிதளவு இஞ்சி துருவல் மற்றும் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்ளலாம். இந்த முறை வெல்லப்பாகை, நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
 • பாகு நன்றாக பக்குவமாக தயாராகும்போது வறுத்த கடலையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்போது அடுப்பின் வெப்பத்தை குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 • கிளறிய கடலையை, நமக்கு தேவையான உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும், மிதமான வெப்பத்தில்., அல்லது அதற்காக வார்த்தெடுக்கப்பட்ட அச்சில் கொட்டிக் கொள்ளலாம்.
 • இப்போது, இதனுடன் பொடி செய்த கற்கண்டு ஏலக்காய் தூள் இவற்றை தூவிக் கொள்ளவும்.

…..

2. சத்துக்கள்

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, விட்டமின், புரோட்டீன், இரும்புச்சத்து, மாங்கனீஸ், துத்தநாகம், கால்சியம்,

பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற மனித உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான தாதுப்பொருட்கள் நிறைந்தது இந்த அபூர்வமான கடலைமிட்டாய்.

…..

3. இதன் பயன்கள்

இது ஒரு மிகச்சிறந்த ஹெல்தி ஸ்னாக்ஸ்ம் கூட.. இதன் மகிமை அமெரிக்கர்களுக்கும், மற்றும் வெளிநாட்டவர்களுக்கும்
தெரிந்ததால்தான், அவர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

pa c de moleque is typical sweet brazilian cuisine made with roasted peanuts rapadura it is called chikki india nougat portugal palanqueta mexico 59529 817 1
 • நிலக்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் அமிலம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தூண்டுகிறது.
 • இளமையை அதிகரிக்கிறது.
 • இதில் உள்ள நியாக்சின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் பெரிதும் துணை செய்கிறது.
 • இதிலுள்ள விட்டமின் பி உடலுக்கு தேவையான சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கக்கூடியது.
 • மேலும் சிறந்த தசைகளின் உற்பத்திக்கு தேவையான புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு இதில் உள்ளது.
 • மன அழுத்தத்தை குறைத்து நினைவாற்றலை அதிகப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
 • இதிலுள்ளவிட்டமின் பி3 மனித மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது.
 • இதில் உள்ள நல்ல கொழுப்புச் சத்தானது, இதயத்திற்கும், இதயத்தில் உள்ள வால்வுகளுக்கும் பக்கபலமாக திகழ்கிறது.
 • இன்றைய உலகின் முக்கிய பிரச்சினையான ஆண், பெண்களின் மலட்டுத்தன்மையை குறைத்து, இல்லாமலேயே செய்துவிடுகிறது.
 • பித்தப்பையில் ஏற்படும் கல்லை கரைக்கும் சக்தி கொண்டதாக அமைந்துள்ளது. மனித உடலின் முக்கியமான எலும்புகளின் சக்தியை அதிகரிக்கிறது.
 • இதை, ஒரு மனிதனின் உடல், ஒரு மனிதன் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாலும் சாப்பிட்டு வருவதாலும் எலும்புகளுக்கு ஏற்படும் நோயை கிட்டே கூட சேர்ப்பது இல்லை.
 • எலும்பு சம்பந்தமான நோய் வராமலேயே செய்து, தடுத்துவிடுகிறது.

இவ்வளவு சக்தி உள்ள நமது நிலக்கடலையை அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா போன்ற தேசங்கள் இதன் சக்தியை அறிந்து கொண்டாடத் துவங்கி, பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வளவுக்கும் நமது தேசத்தின் முக்கிய எண்ணெய் வித்துக்களில் இதுவும் ஒன்று!

நாம் இதன் மதிப்பை எவ்வளவு தூரம் அறிந்து வைத்துள்ளோம்?
எந்த அளவு பயன்படுத்திக் கொள்கிறோம்?

நமக்கு நாமே கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி இது?
இதுவரை இல்லாவிட்டாலும், இனிமேலாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

நமது உடலை நாமே இயற்கையோடு சேர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலம் கனிந்து விட்டது.

நமது உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை தேடத் துவங்கி இருக்கிறோம்.

நமது தேசத் தந்தையின் முக்கிய உணவு பொருளே இதுதானே!
அதனை நாமும் தெரிந்து பயன்படுத்திக்கொள்வது முறைதானே!

நமது உடல் ஆரோக்கியத்தை நல்லபடியாக பேணிப் பாதுகாத்துக் கொள்வது, நமது வீட்டுக்கும், நம் நாட்டுக்கும் நல்ல செயல் வடிவம் தானே! உணர்வோம்! உணர்வோம் இதனை!

…..

ருசியான கடலை மிட்டாய் கிடைக்கும் இடம் : Standard Coldpressed Oil

https://www.standardcoldpressedoil.com/kadalai-mittai

Reference Links:

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *