முட்டை பிரியாணி அதிக அளவில் வீட்டில் செய்வதை பலர் விரும்பமாட்டார்கள் காரணம் , துர்நாற்றம் மற்றும் சமையலில் சொதப்பல் போன்றவை இவற்றிற்கு காரணம் ஆனால் இனி அப்படி இல்லை , ஏனெனில் இதோ சுவையாகவும் ,சுலபமாகவும் முட்டை பிரியாணி செய்ய ரெசிபி :
முட்டை பிரியாணி தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி – ஒரு கிலோ,
- முட்டை – 14,
- தக்காளி – 5,
- பெரிய வெங்காயம் – 5,
- கடைந்த தயிர் – 1 1/2கப்,
- எண்ணெய் – ஒரு கப்,
- நெய் – அரை கப்,
- உப்பு – 4 டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
- இஞ்சி, பூண்டு விழுது – 8 டீஸ்பூன்.
- மசாலா அரைக்க தேவைப்படும் பொருட்கள் :
- பட்டை – 4,
- லவங்கம் – 4,
- ஏலக்காய் – 10,
- பச்சை மிளகாய் – 8_
- புதினா – ஒரு கைப்பிடி,
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி.
செய்முறை :
- அரிசியை நன்றாக கழுவ வேண்டும் மசாலா பொருட்களை நன்றாக உரலில் அரைத்து கொள்ளுங்கள், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
- ஒரு பாத்திரத்தில் மரச்செக்கு எண்ணெய், பசு நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
- அரைத்த மசாலா, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி எண்ணெய் ஓரங்களில் வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு கொதிக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.
- பின்பு அடுப்பில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு நன்றாக வதக்கி பின் பாதி கொதிநிலையில் இறக்கவும். பின் 10 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
இதோ சுவையான முட்டை பிரியாணி ரெடி.
மரச்செக்கு எண்ணெய் மற்றும் நெய் வாங்க இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-04 14:47:41.