உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

2 sec read

இன்றைய அவசர நிலையில் உணவுகள் அனைத்தும் அவசரமாக ஆகிவிட்டன ஆகையால் அரைகுறையான உணவுகளை தான் நாம் உண்ண நேர்கிறது அதை தடுக்க எளிய முறையில் புதுமையாக ஒரு உணவாக உருளைக்கிழங்கு சாதம்.

கிழங்கு சாதம் செய்ய தேவையான பொருட்கள் :

 • உருளைக்கிழங்கு -4 (பொடியாக)
 • மசாலா அரைத்தது ( பட்டை ,சோம்பு , பிரிஞ்சி இலை )
 • வெங்காயம் 2 (பொடியாக)
 • மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 • பச்சமிளகாய் – 1
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபில் ஸ்பூன்.
 • வடித்த சாதம் – தேவையான அளவு
 • மரச்செக்கு நல்எண்ணெய் – 6 தேக்கரண்டி
 • கருவேப்பிலை ,கொத்தமல்லி – தேவையான அளவு.
 • உப்பு தேவையான அளவு.

உருளைக்கிழங்கு சாதம் செய்யும் முறை :

 • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
 • அதில் அரைத்த மசாலாவினை சேர்க்கவும். பின் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு கரண்டி சேர்க்கவும்.
 • இரண்டு நிமிடங்கள் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்க்கவும். உருளைக்கிழங்கில் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
 • பின் தேவையான அளவு மிளகாய்த்தூள் மற்றும் உப்பினை சேர்க்கவும் பின்பு அரை கரண்டி மஞ்சள் தூளை சேர்க்கவும்.
 • செய்த உருளைக்கிழங்கு மசாலாவை நன்றாக வதக்கவும், சரியாக ஐந்து நிமிடம் முதல் ஏழு நிமிடங்கள் வரை மூடி போட்டு வைக்கவும்.
 • பின்பு செய்த மசாலாவில் வடித்த சாப்பாட்டை சேர்க்கவும், பின் நன்றாக வதக்கவும்.
 • இறுதியாக நன்றாக வதக்கிய பின்பு கருவேப்பிலை கொத்தமல்லி புதினா ஆகியவற்றை சேர்த்து பரிமாறலாம்.
 • பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவாகவும், சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் ,செய்து தர இது ஒரு மிகச்சிறந்த உணவு.

ஸ்டேண்டர்டு ஸ்டோர்

புதிய எண்: 104. பழைய எண் : 42

வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம்: https://www.standardcoldpressedoil.com/

Originally posted 2020-01-04 15:04:01.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *