எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள்.
நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோ மரச்செக்கு எண்ணெயைத்தான்.
கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.
கிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.
பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் மாடு வெச்சுதான் செக்கு இருந்தது.
திடீர்னு ஒருநாள் செக்கு எண்ணெய் உடம்புக்கு நல்லது இல்லைன்னும், அதிக விலையா இருக்குதுன்னும்னு பேச்சு வந்து மரச்செக்கு எண்ணெய் தொழில் நொடிய ஆரம்பிச்சது.
ஒருகட்டத்துல சுத்தமா உற்பத்தியே நின்னு போச்சு. வேற வேற தொழிலுக்கு மாறினோம்.
இப்ப மறுபடியும் செக்கு எண்ணெய் மேல உள்ள நம்பிக்கை வளர ஆரம்பிச்சு எங்களை நோக்கி மக்கள் வர ஆரம்பிச்சிருக்காங்க.
…..
1. நல்லெண்ணெய்
எள்ளை நல்ல தரம் பார்த்து வாங்கிட்டு வந்து வெயிலில் காய வெச்சு அரைப்போம். 100 கிலோ எள்ளு அரைக்க 10 மணி நேரம் ஆகிடும்.
10 கிலோ எள்ளுக்கு ஒரு கிலோ நாட்டு வெல்லம் சேர்த்துக்குவோம். அப்பத்தான் எண்ணெய் நல்லா பிரிஞ்சு வரும். நாள்பட்டாலும் சிக்கு வாடை அடிக்காம நல்லபடியா இருக்கும்.
100 கிலோ எள்ளுக்கு 40 லிட்டர் நல்லெண்ணெயும், 58 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும்.
சிலர், கருப்பட்டி போட்டு ஆட்டிய நல்லெண்ணெய்தான் வேணும்னு குறிப்பா கேப்பாங்க.
அவங்களுக்கு இதே மாதிரி அளவுல 100 கிலோவுக்கு 10 கிலோ பனங்கருப்பட்டி போட்டு ஆட்டித்தருவோம். எள்ளுப்புண்ணாக்கு 40-50 ரூபாய்க்கு விற்கிறது.
…..
2. தேங்காய் எண்ணெய்
தேங்காயை 3 வாரம் காயவெச்சு கொப்பரைத் தேங்காயாக மாத்துவோம். 100 கிலோ கொப்பரைத் தேங்காயை 6 மணி நேரத்தில் ஆட்டிடலாம்.
30 கிலோ தேங்காய்க்கு 1 கிலோ வெல்லம் கணக்கு வெச்சுப்போம். எலுமிச்சம்பழம் 100 கிலோவுக்கு 8 பழம் சேர்க்கணும்.
அப்பத்தான் தேங்காய் எண்ணெய் சீக்கிரமா கெட்டுப்போகாது. நல்ல வாசனையாகவும் இருக்கும்.
…..
3. கடலை எண்ணெய்
நிலக்கடலையை அதன் ஓட்டோட வாங்கி வந்து காய வைப்போம். அதுக்கப்புறம் அதன் ஓட்டைப் பிரிச்சு கடலையை மட்டும் காய வைச்சு ஆட்டி கிடைக்கிறது கடலை எண்ணெய்.
பொதுவா செக்குல ஆட்டுற எண்ணெயில் அந்த தானியங்களுக்கே உரிய வாசனை அரைச்சு கிடைக்கிற எண்ணெயிலேயும் கிடைக்கும்”.
கடலையை 8 மணி நேரத்தில் 100 கிலோ வரைக்கும் ஆட்டி எடுத்தா 40 லிட்டர் எண்ணெயும், 59 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும்.
…..
https://standardcoldpressedoil.com/sesame-oil
https://standardcoldpressedoil.com/cold-pressed-ground-nut-oil
https://standardcoldpressedoil.com/coconut-oil
Originally posted 2017-05-30 13:06:02.