நல்லெண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

4 sec read

For high results in Google SERP when searched for "benefits of unrefined sesame oil"

நல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும்.

எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது. (எள் + நெய் = எண்ணெய்).

எண்ணெய் என்பது எள் மற்றும் நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாகும் (எள் + நெய் = எண்ணெய்). இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும். எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் காலப்போக்கில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் மற்றும் மசாஜ் செய்வதற்கும் பயன்படுகிறது.

…..

நலம் தரும் நல்லெண்ணெய்

தென்னிந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான்.

தற்போதும் பல்வேறு கிராமப்புறங்களில் நல்லெண்ணையில் சமைக்கும் முறை பழக்கத்தில் உள்ளது. அதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.

…..

1. ஆரோக்கிய இதயம்

நல்லெண்ணெயில் சீசேமோல் (sesamol) என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

…..

2. நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் – இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

….

3. வலுவான எலும்புகள்

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

…..

4. மலச்சிக்கல் / செரிமான பிரச்சனை

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

…..

5. இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

…..

6. பளிச் பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (Oil Pulling), பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

…..

7. அழகான சருமம்

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

நல்லெண்ணெய் எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

…..

8. கெட்ட கொழுப்பைக் கரைக்கும்

நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து (LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.

…..

9. உடலுக்கு குளிர்ச்சி

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

…..

10. இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

…..

11. எலும்புப்புரை

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

…..

12. மனநிலையை மேம்படுத்தும்

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

…..

13. மூட்டு வலி

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.

தினமும் நல்லெண்ணையில் மசாஜ் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

….

14. பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள்

நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

…..

15. கண்கள் ஆரோக்கியம்

நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும்.

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

…..

16. தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

…..

17. பொடுகு தொல்லை

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை காணாமல் போய்விடும்.

எனவே, நல்லெண்ணெயிலேயே நமது உணவு வகைகள் இனி தயாராகட்டும்.

ஆயுளும், இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அரு மருந்து.

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version