கடலை எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்

6 sec read

peanut oil table 87742 7618

நிலக்கடலை… இது வட்டார வழக்குகளில் கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான் (peanut), மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

நிலக்கடலை பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும்.

இது தென் அமெரிக்காவுக்கு தாயகமாகக் கொண்டது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது.

வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது.

….

1. ஏழைகளின் பாதாம்

இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்‘ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

…..

மரச்செக்கு கடலை எண்ணையின் வியத்தகு மருத்துவ பயன்கள்

மறந்துபோன நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிலக்கடலை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மகிமை தெரிந்தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.

சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.

…..

1. மாங்கனீசு சத்து

நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது. நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.

…..

2. ஆண்டி ஆக்சிடண்ட்

நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.

‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இது கொலஸ்டிராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது.

எனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

…..

3. நோய் எதிர்ப்பு

????????????????????????????????????????????????????????????????????????

‘ரெசவராடால்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது.

நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

….

4. வைட்டமின் இ

கடலை எண்ணெயில்’வைட்டமின்-இ’மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும்.

…..

5. செல் சவ்வு

செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும், ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.

…..

6. சத்துகள்

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

…..

7. போலிக் அமிலம்

போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து விடும்.

இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்துக் குறைவதால் இரத்த சோகை நோய் ஏற்படும்.

மேலும், போலிக் அமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

…..

8. நீரிழிவு நோய்

இதில் மாங்கனீசு சத்து அதிகம் உள்ளது. மாவுச் சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீசு பெரும் பங்காற்றுகிறது. நீரிழிவு நோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.

…..

9. நோய் எதிர்ப்பு சக்தி

பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது.

…..

10. நியாசின்

கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.

…..

11. ஒமேகா 6

ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக தருகிறது. மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

…..

12. இரத்த சோகை

நமது அனைவரின் உடல்நலம் நன்றாக இருப்பதற்கும் போலிக் அமிலம் இன்றியமையாததாகும். உடலில் போலிக் அமிலத்தின் சதவீதம் குறியும் போது ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது.

இது எதிர்காலத்தில் ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே அவ்வப்போது கடலை எண்ணையை உணவில் பயன்படுத்திக்கொள்ளும் போது உடலின் போலிக் அமிலம் தேவை பூர்த்தியாகி ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

…..

13. தீங்கில்லாத கொழுப்பு

இரத்த அழுத்தம் கடலை எண்ணையில் மோனோசாச்சுரேட்டட் பேட் எனப்படும் தீங்கில்லாத கொழுப்பு நிறைந்திருக்கிறது. இந்த கொழுப்பு உடலில் ஓடும் ரத்தத்தின் சீரான ஓட்டத்தை காக்கிறது.

நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் அவற்றை நன்கு விரிவடைய செய்து இதயத்தின் சீரான செயல்பாட்டை பராமரிக்கிறது. ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

…..

14. தசைகளை வலிமையாக்கும்

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

…..

15. கொழுப்பைக் குறைக்கும்

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotei) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein – HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

…..

16. மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

…..

17.மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

…..

18. இதயம் காக்கும்

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வாரட்ரால் என்ற சத்து இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

நிலக்கடலையைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.

குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

…..

19. புரோட்டின் நிறைந்தது

கடலையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளது.

அதாவது, இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.

…..

20. இளமை பராமரிக்கும்

இதிலுள்ள சத்துகள் முதுமையைத் தள்ளிப்போடுவதுடன், இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது.

நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

…..

21. கருப்பைக் கோளாறுகள் நீங்கும்

நிலக்கடலையில் உள்ள சத்துகள் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. குறிப்பாக நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது.

ஆகவே பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.

இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பகக்கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன.

இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

…..

22. பித்தப்பை கல் கரைக்கும்

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

…..

23. எலும்புக்கு வலிமை தரும்

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

…..

24. இதயம்

கடலை எண்ணையில் குறைந்த அளவிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்காத குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்து அதிகம் இருக்கின்றன.

எனவே கடலை எண்ணையை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன.

இந்த எண்ணையில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது.

…..

25. புற்றுநோய்

கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது.

எனவே உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல் புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய் ஏற்படுவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்புரிகிறது கடலை எண்ணெய்.

…..

26. முதியோர்கள்

வயோதிகம் காரணமாக பலருக்கும் மூளை செல்களின் வளர்ச்சி குன்றுவதால் ஞாபக மறதி, நரம்புகள் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும்.

நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும். முதியோர்களுக்கு ஏற்படும் மனசோர்வு பிரச்சனையையும் குறைப்பதில் கடலை எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

…..

27. மூட்டு வலி

முப்பது வயதை கடந்த பலருக்கும் கடின உடலுழைப்பினாலும், உடலின் தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது.

சிறிதளவு கடலை எண்ணையை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும்.

…..

28. முதுமை

அனைவருமே முதுமை அடைவது என்பது தவிர்க்க முடியாத இயற்கையின் நீதி.

ஆனால் சிலருக்கு எப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்க பேரார்வம் இருக்கும். கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தி செய்யட்டும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை தோற்றம் மேலோங்கும்.

…..

29. தலைமுடி

தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்த சத்து உடலில் குறைவதால் தலைமுடி வலுவிழந்து முடிகொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது.

உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.

…..

30. சரும நலம்

அனைவருக்கும் சருமத்தில் சிறிதளவு ஈரப்பதம் இருக்க வேண்டியது அவசியம். ஈரப்பதம் குறைவதால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல்வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகின்றன.

கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.

…..

31. வயிறு

கடலை எண்ணெய் பெரும்பாலும் அனைத்து வயதினராலும் சுலபத்தில் செரிமானம் செய்யக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது.

செரிமான திறன் சரிவர இல்லாதவர்கள், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட காலம் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள் கடலை எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்த பலனளிக்கும்.

https://www.standardcoldpressedoil.com/cold-pressed-ground-nut-oil

Originally posted 2019-08-26 16:56:35.

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version