இன்றைய சூழலில் வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
இந்த நிலையில் அப்படிப்பட்ட வேலைகளிலும் சில வேலைகள் ஆபத்தை தரக்கூடிய ஒன்றாக அமைகின்றது.
அப்படிப்பட்ட வேலைகள் என்னென்ன என்பதைப் பற்றிக் காண்போம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள்
எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு வேலையை செய்து கொண்டு வருகின்றார்கள்.
ஏனெனில் அதில் வேலை செய்வோருக்கு அதிகமான வாயு பாதிப்புகள் ஏற்பட்டால் உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
…
கழிவுநீர் சுத்தகரிப்பு பணியாளர்கள்:
கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியாளர்கள் பலவிதமான நீர் தொடர்பான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
உதாரணமாக காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் இவர்களை எளிதில் அண்டிவிடுகின்றது.
அதுமட்டுமின்றி பல விதமான வாயு பிரச்சனைகளும் இவர்களைத்தாக்க வாய்ப்புள்ளது.
…
கால்நடை மருத்துவர்கள்
பலரது வீட்டிலும் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் ஒரு குறைபாடு என்றால் கால்நடை மருத்துவரை தான் அனுகுவார்கள் அப்படிப்பட்ட நிலையில் அந்த செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் தொற்று நோயோ அல்லது வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அது கால்நடை மருத்துவர்களையும் பாதிக்கச்செய்யும் எனவே அதுவும் ஆபத்துக்கள் நிறைந்த வேலைதான்…
…
சுரங்கத் தொழிலாளர்கள்
சுரங்க பணியில் அடிக்கடி தீ விபத்துகளும் வெடி விபத்துகள் ஏற்படுவதன் காரணமாக பலவிதமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமின்றி சுரங்கத்தொழிலாளர்களின் சூழலும் அங்குள்ள மாசு, புகையும் அவர்கள் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது.
…
சாக்கடை சுத்தம் செய்பவர்கள்
சிலர் அருவருப்பாக நினைக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான தொழிலை செய்து வருகின்றார்கள் என்றே கூறலாம் .
ஏனெனில் பலவிதமான அச்சுறுத்தல்களும் வாயு பயங்களும் நிறைந்த சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது என்பது ஆபத்துகள் நிறைந்த ஒரு வேலையாகவே உள்ளது.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:30:36.