நம் ஊரில் பிரியாணி பிடிக்காத அசைவ பிரியர்கள் என்பது மிக குறைவு அப்படிப்பட்ட பிரியாணி வெளியில் பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்ற ஆசை நமக்குள் எழுந்தாலும் அதன் சுத்தம் பற்றி நினைக்கும்போது அதன் ஆசை பறிபோகிறது .
அதனால் தான் சுவையான மற்றும் சுத்தமான சிக்கன் பிரியாணியை வீட்டிலேயே செய்து உன்ன இதோ பிரியாணி செய்ய ரெசிபி ரெடி
சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- கோழி இறைச்சி (துண்டாக) – 1 கிலோ
- பெரிய வெங்காயம் – 4
- தக்காளி – 4
- இஞ்சி பூண்டு விழுது – 6 தேக்கரண்டி
- கறுவாபட்டை – 8
- கராம்பு – 8
- பிரியாணி இலை – 4
- ஏலக்காய் – 5
- பச்சை மிளகாய் – 7
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- சிக்கன் மசாலா – 4 தேக்கரண்டி
- புதினா இலை – 2 கைப்பிடி
- கொத்தமல்லி இலை – 2 கைப்பிடி
- எண்ணெய் – 4 மேசைக் கரண்டி
- நெய் – 2 மேசைக் கரண்டி
- உப்பு – தேவையான அளவு
இவற்றில் முடிந்த வரை எண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை சுத்தமான நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தவும்.
சிக்கன் பிரியாணி செய்முறை :
குக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.
பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம்.
அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி
Originally posted 2020-01-04 14:01:20.