இனி எல்லாம் இயற்கையே!!!

0 sec read

natural cold pressed oil

மனித இனம் இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டதன் விளைவுதான் பருவம் தப்பிய மழை, சுழற்றியடிக்கும் சுனாமி, தீடிர் தாக்குதல் நடத்தும் புதுபுது நோய்கள் என மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளே சாட்சி.

அதனால் முடிந்த அளவு இயற்கையுடன் இணைந்து வாழ பழகி கொள்ள வேண்டும். இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்… வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்…

இதற்கு நாம் முதலில் உணவில் இருந்து ஆரம்பிக்கலாம்.

…..

1. மரச்செக்கு எண்ணெயின் மறுவாழ்வு

தற்போது பாரம்பர்ய உணவுகள் (Traditional Food) குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது.

இதனால், மரச்செக்குக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ அழிவு நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்... போன்றவற்றை ஆட்டி வந்தார்கள்.

காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது.

மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன.

மாடுகளைப் பயன்படுத்தாமல், இப்போதும் கூட, சிறிய அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்… அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.

மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும்.

காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.

….

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version