பாரம்பரிய மரச்செக்கு எண்ணெயின் பயன்கள்!

0 sec read

peanut oil table 87742 7618

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர்.

செக்கானது வாகை மரத்தால் செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்கு ஆரம்பத்தில் பயன்பட்டது. ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் பாவனையில் உள்ளன.

என் தாத்தா, பெரியப்பா எல்லாரும் மாடுகள் ஓட்டி, மரச்செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து, விற்று தொழில் நடத்தி வந்தவர்கள் தான்.

காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் பாக்கெட் எண்ணெய் வருகையால், 1980-க்குப் பின், மரச்செக்கில் மாடு பூட்டி எண்ணெய் பிழிந்து எடுப்பது வழக்கொழிந்து விட்டது.

சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என, அவதிப்படும் மக்கள், தற்போது இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, மீண்டும் மரச்செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி பண்ண முடிவெடுத்தேன்.

….

1. இரும்பு செக்கு எண்ணெய்

இரும்பு செக்கில் எண்ணெய் எடுக்கும்போது, அதன் வேகத்தால் எண்ணெய் அதிகம் சூடாகிறது.

அந்த வெப்பத்தால் எண்ணெயில் இருக்கும் உயிர்ச்சத்துகள் குறைந்துவிடும். அதனால் தான், ‘ஒரு தடவை பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது’ என்கின்றனர்.

….

2. மரச்செக்கு எண்ணெய்

மரச்செக்கை மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் எள்ளுடன் சேர்த்து அரைக்கப்படும் கருப்பட்டி, சமன் செய்துவிடும். மரச்செக்கிலிருந்து பிழித்தெடுக்கப்படும் எண்ணெயை வடிகட்ட மாட்டோம்.

பித்தளை பாத்திரத்தில் ஊற்றி, வெயிலில் காய வைத்தால் தானாகவே தெளிந்துவிடும். இதனால், அந்த எண்ணெய்களில் உள்ள சத்துகள் அப்படியே இருக்கும்.

இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால், பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும்.

கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது.

ஆனால், மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்… அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.

மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும்.

காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.

ஒரு மரச்செக்கில் ஒரு நாளுக்கு, 28 லிட்டர் வரை மட்டுமே உற்பத்தி பண்ண முடியும். நல்லெண்ணெய் மட்டுமின்றி கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் தனி தனியான செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றன.

இது ஒரு பாரம்பரிய தொழில் என்பதால், அரசு மானியம் வழங்கினால், மரச்செக்கு தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். நம் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை, அரசு முன் வந்து ஊக்குவிக்க வேண்டும்.

மரச்செக்கு மூலம் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரித்து இன்றைய மக்களிடம் சேர்க்க உள்ளோம்.

தற்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது.

இதனால், மரச்செக்குக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ அழிவு நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்… போன்றவற்றை ஆட்டி வந்தார்கள்.

காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்துபோனது.

மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரக்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன.

மாடுகளைப் பயன்படுத்தாமல், இப்போதும் கூட, சிறிய அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

முதல்தர சுத்தமான இயற்கை எண்ணெய்வித்துக்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் வாகை மரச்செக்கினால் தயாரிக்கப்பட்ட இயற்கை நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

கிராமத்து விவசாயிகளிடமிருந்து மரச்செக்கு எண்ணெய் நேரடியாக வீட்டிற்கு மட்டும்..

மரச்செக்கு எண்ணெய் தேவைக்கு: www.StandardColdPressedOil.com

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

One Reply to “பாரம்பரிய மரச்செக்கு எண்ணெயின் பயன்கள்!”

  1. Super advice nanum chekku ennai thayarikiren ninga nan mattum ella ennai ponra naraya pair thayarikkirainga avangalidamum ninga vaingi nalla tamil nadu fulla ennai poi serkkalam. Ippadiku ungal nan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version