பெரும்பாலும் காலை உணவுகளினால் மட்டுமே நம்முடைய அலுவலக பணிகள் சிறப்பாக தொடக்கம் அடைகிறது, அப்படிப்பட்ட நிலையில் ஏதோ ஒரு காலை உணவை உண்டுவிட்டு சோர்வாக வேலை செய்யும் பலர் இருக்கிறார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது இந்த கேழ்வரகு தோசை.
*கேழ்வரகு தோசை செய்ய தேவையான பொருட்கள்:*
கேழ்வரகு – அரை கிலோ
அரிசி மாவு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5
சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு.
*கேழ்வரகு தோசை செய்யும் முறை:*
•பதமான முறையில் அரைக்கப்பட்ட கேழ்வரகு மாவு ,அரிசி மாவு ,உளுத்தம் பருப்பு மாவு ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
•இப்போது சீரகம் மற்றும் உப்பினை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
•பின் பச்சை மிளகாய் வெங்காயம் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு வடிவில் நன்றாக கலக்கவும்.
•இப்போது தோசை மாவு பதத்தில் உருவாக்கப்பட்ட கேழ்வரகு மாவினை புளிக்கச் செய்ய வேண்டும்.
•புளித்த தோசை மாவினை கொண்டு நல்லெண்ணெயில் தோசை சுட தோசை சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியமான ,மிகச்சிறந்த காலை உணவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
*முக்கிய குறிப்பு*
“தோசை சுடும்போது நல்லெண்ணெயில் மரச்செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.”
“புளித்த மாவினை உருவாக்க சிறந்த வழி இரவில் மாவினை கலக்கிவிட்டு காலையில் தோசை சுட்டால் அருமையாகவும் மாவு புளித்த சுவையுடனும் இருக்கும்.”
சிறுதானிய வகைகள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
*மேலும் தொடர்புக்கு*
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-24 15:42:28.