உணவு உண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளிடமும் ஈசியாக உணவை உட்கொள்ள வைக்கலாம் இந்த வடாம் இருந்தால், சுவையிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி சமமான வலிமை படைத்த ஜவ்வரிசி வடாம் செய்வது எப்படி என்பதை காண்போம்.

ஜவ்வரிசி வடாம் செய்ய தேவையான பொருட்கள்:
- ஜவ்வரிசி – 2 கப் .
- மோர் – ஒரு கப் .
- காய்ந்த மிளகாய் – 10 .
- இஞ்சி சாறு – கால் கப் .
- நெய் ஒரு – ஸ்பூன் .
- உப்பு – தேவையான அளவு.

ஜவ்வரிசி வடாம் செய்யும் முறை:
- சுத்தப்படுத்தப்பட்ட ஜவ்வரிசியை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
- பின் நீரிலிருந்து ஜவ்வரிசியை எடுத்து உப்பு, இஞ்சி, மிளகாய் விழுது ஆகியவற்றை அரைத்து அந்த சாறினை ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 6 கப் நீர் சேர்த்து ஜவ்வரிசி கலவையையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அதை கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- ஜவ்வரிசி சாதம் வடிவில் வெந்த பிறகு அதனுடன் மோரையும் நெய்யையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்பு வெயில் படும் இடங்களில் துணியினை போட்டு அதில் தேவையான அளவில் தயார் செய்த ஜவ்வரிசி மாவினை எடுத்து வைக்கவும்.
- இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை வெயிலின் அளவை பொருத்து காயவைக்கவும் பின்பு இதை தேவைப்படும்போது பொரித்து உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.
- இதை உணவுகளோடு சேர்த்து மட்டும் அல்லாமல் தனியாகவும் உட்கொள்ளலாம்.
- எண்ணெய்களை பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரக்கூடியது ஆகும்.
மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.மேலும் தொடர்புக்க , அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 20:05:27.