உளுந்து கொழுக்கட்டைகளை இறைவனுக்கு படைப்பதற்கும் சிலர் விரும்பி உண்பதாலும் அதை அதிகமான அளவில் கடைகளில் தேடித் தேடி வாங்குவது வழக்கம்
அப்படிப்பட்ட உளுந்துகொழுக்கட்டையை சுவையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் வீட்டில் செய்வது எப்படி என்பதை காண்போம்.
உளுந்து கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி மாவு – 100 கிராம்
- உளுத்தம் பருப்பு – 50 கிராம்
- கடுகு – ஒரு டீஸ்பூன்
- உப்பு ,கருவேப்பிலை ,தேவையான அளவு
- நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – ஒரு கப்
- பச்சை மிளகாய் – 2
உளுந்து கொழுக்கட்டை செய்யும் முறை:
- சாதாரணமாக கொழுக்கட்டைக்கு மாவு செய்வதுபோல் பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து சூடான தண்ணீரில் பிசையும்.
- பின் உளுத்தம்பருப்புடன் பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- சாதாரண பாத்திரத்தில் இவற்றை கொட்டி வேக வைத்த பின் உதிர்க்கவும்.
- இப்போது நல்லெண்ணெயில் கடுகு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.
- பின்பு தேங்காய் துருவலை சேர்த்து கொழுக்கட்டை வடிவில் பிடித்து இட்லி பானையில் வைத்து வேக வைத்து ஆவி வரும்பொழுது எடுத்தால் சுவையான ஆரோக்கியமான உளுந்து கொழுக்கட்டை தயார்.
- பண்டிகை காலங்களிலும் சரி, பசிக்கும் காலங்களிலும் சரி வீட்டிலேயே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இந்த உளுந்து கொழுக்கட்டையை தயார் செய்யலாம்.
- எண்ணெய்களை பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் (Marachekku Oil) பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை தரக்கூடியது ஆகும்.
மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 20:08:18.