ஊறுகாய் என்றாலே மாங்காய், பூண்டு என்ற நிலைகளை தாண்டி தற்போது தக்காளி ஊறுகாய் பலரது மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம் .அப்படிப்பட்ட வகையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான தக்காளி ஊறுகாய் வீட்டில் செய்வது எப்படி என்பதை காண்போம்.
தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் :
தக்காளி – அரை கிலோ .
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன் .
மல்லித் தூள் – 2 டீஸ்பூன் .
மஞ்சள்தூள் – தேவையான அளவு.
கறிவேப்பிலை – இரண்டு தண்டு.
பெருங்காயத்தூள் – 2 ஸ்பூன்.
கடுகு – 2 டீஸ்பூன் .
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.

தக்காளி ஊறுகாய் செய்யும் முறை:
வேகவைத்த தக்காளியினை எடுத்து மசியவைக்க வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை ,கடுகு ஆகியவற்றை சிறிது நேரம் தாளிக்கவும்.
பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் பிறகு மஞ்சள் தூள், மல்லி தூள் பெருங்காயத் தூள் ,மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இவை ஒன்றோடு ஒன்றாக இணைந்து கெட்டியாக வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
சிறிது நேரம் ஆற வைத்து பின்பு இதை உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.
இந்த தக்காளி ஊறுகாயை இட்லி தோசை போன்ற உணவுகள் மட்டுமின்றி உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.
உணவுகளில் தக்காளியை வெறுப்பவர்களிடம் இதை ஊறுகாயாக கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.
நல்லெண்ணெய்யை பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 20:03:55.