சிக்கன் பிரியாணி ,மட்டன் பிரியாணி உண்டு சலித்து இருப்பவர்களுக்கு மீன் பிரியாணி என்பது ஒரு மிகப்பெரிய வரம் தான். ஆரோக்கியமான மற்றும் சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி என்பதை காண்போம்.
மீன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
முள் இல்லாத மீன் – அரை கிலோ .
நெய் – 400 கிராம்.
அரிசி – ஒரு கிலோ
பால் – கால் டம்ளர் .
தயிர் – கால் லிட்டர்.
வெங்காயம் – கால் கிலோ
தனியா – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு.
சோம்பு தூள் – கால் டீஸ்பூன் .
ஏலக்காய் – கால் டீஸ்பூன் .
மிளகுத் தூள் ,கேசரி பவுடர் ,உப்பு – தேவையான அளவு.
மீன் பிரியானி செய்யும் முறை :
கடாயில் நெய் ஊற்றி தயிர், உப்பு, சோம்புத்தூள், ஏலக்காய்த்தூள், லவங்கம் தூள், மிளகுத் தூள், கேசரி பவுடர் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக கிளறவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்கவும்.
பின்பு நன்கு கழுவி சுத்தமாக்கப்பட்ட மீனை எண்ணெயில் சேர்த்து மீன் நன்றாக வேகும் வரை கடாயில் வைக்கவும்.
மீன் நன்றாக வெந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வேக வைக்கவும்.
சாதம் வெந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதன் மீது லேசாக பாலினை தெளித்து பின்பு சிறிது நேரம் மூடி வைக்கவும் அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி ரெடி.
முக்கிய குறிப்பு :
மீன் பிரியாணியை கிளறாமல் அப்படியே எடுப்பதன் மூலமாக மீன் உடையாமல் இருப்பதோடு சாதத்தின் சுவையும் ருசியும் மாறாமல் இருக்கும்.
உணவில் மரச்செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதன் மூலமாக உடல் ஆரோக்கியம் வலிமை பெறுவதோடு நோய் வருவதை தடுக்கலாம்.
மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்கள் வாங்க சிறந்த இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:50:39.