நல்ல அறுசுவையான உணவிற்கு எத்தனை வகையான துவையல்களும் அவியல்களும் வைத்தாலும் மாங்காய் ஊறுகாய் பதத்திற்கு வருமா என்று கேட்டால் அது ஒரு கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட சுவையான மாங்காய் ஊறுகாய் செய்முறையை காண்போம்.

மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
மாங்காய் – ஒன்று .
கடுகு – ஒரு ஸ்பூன் .
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்.
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன் .
ஓமம் – கால் டீஸ்பூன் .
வெந்தயப் பொடி – அரை டீஸ்பூன்.
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு.
மாங்காய் ஊறுகாய் செய்யும் முறை
மாங்காயை தேவையான அளவு நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
பின் கடாயில் நல்லெண்ணெயை காயவிட்டு அதில் மஞ்சள் தூளை சேர்த்து கிளறி பின்பு ஓமப்பொடி சேர்த்து பின்பு மாங்காய் மற்றும் உப்பு கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பிறகு மிளகாய் தூள் மற்றும் வெந்தய பொடியை சேர்க்கவும்.
இவை அனைத்தும் நன்றாக ஒன்றோடு ஒன்றாக கலரும் படி நன்றாக கிளறவும்.
ஸ்க் அலரிய சிறிது நேரத்தில் எண்ணெய் தானாக வரும் பொழுது அடுப்பினை நிறுத்தி தேவைப்பட்டால் கடுகை தாளித்து இதனுடன் சேர்க்கலாம்.
நல்லெண்ணெய் கலவையுடன் சுவையான மற்றும் வீட்டில் தயாரித்த ஆரோக்கியமான மாங்காய் ஊறுகாய் தயார்.
முக்கிய குறிப்பு :
எண்ணெய்களை பயன்படுத்தும்பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
கடுகு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் அதை தேவைப்பட்டால் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:47:07.