ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும் உடற்பயிற்சிகள் அற்ற வாழ்க்கையும் தான் இன்றைய நிலையில் உடலில் ஏற்படக்கூடிய நோய்க்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
அப்படிப்பட்ட நிலையில் இதயத்தை பாதிக்குமா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே விடை.
இன்றைய சூழலில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கையை விட அதிகம் என்றே கூறலாம். இத்தனை கொடுமையான இதய நோயிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே உள்ள உணவு பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான சூப் செய்வது எப்படி என்பதை காண்போம்.
துவரம் பருப்பு மற்றும் பீன்ஸ்
உணவு பொருட்களில் புரதத்தை அள்ளி வழங்கக்கூடிய துவரம்பருப்பு மற்றும் பீன்ஸ் இன்றைய உணவுகளில் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வகையான உணவுகளில் பொட்டாசியம் உள்ளதால் இவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கின்றன.
இவற்றை பயன்படுத்தி சூப் செய்வதன் மூலமாக இதய நோய்களில் இருந்து விடுபடலாம்.
உருளைக்கிழங்கு சூப்
இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் பங்கினை வகிப்பது உருளைக்கிழங்கு சூப் என்றே சொல்லலாம்.
ஏனெனில் இதில் உள்ள சத்துக்கள் இதயத்திற்கு தேவையான அனைத்து வலிமைகளையும் வழங்குகின்றன இதை பயன்படுத்தி சூப் செய்வதன் மூலமாக இரத்த அழுத்தங்கள் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
மேலும் இதனுடன் மிளகு சேர்த்து சூப் தயாரிப்பது சுவையையும் ஆரோக்கியத்தையும் மேலும் கூட்டும்.
முட்டைகோஸ் சூப்
சுவையிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி முக்கிய இடத்தில் உள்ள சூப் வகைகளில் ஒன்று என்றால் அது முட்டைகோஸ் சூப் தான் .
ஏனெனில் இதில் இதயத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது அதேசமயம் இதில் கொழுப்புகள் அற்ற பால் சேர்த்து சாப்பிட்டால் இதயத்திற்கு மேலும் பலம் தான்.
மரச்செக்கு எண்ணெய் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 21:09:14.