முந்தைய காலங்களில் பலருடைய வீட்டில் சிறுதானியங்கள் இருக்கும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சிறுதானியங்கள்
பற்றி தெரிந்தவர்களே குறைவாகதான் உள்ளனர். கம்பு, தினை, கேழ்வரகு, மக்காச் சோளம், வரகு போன்றவற்றை அடக்கியவை சிறுதானியங்கள்.
சில மனிதர்கள் நூறுவயது மேலும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கு மிகப்பெரிய பின்னணி என்னவென்று பார்த்தால் சிறுதானியங்கள் தான்.
ஊட்டச்சத்து என்ற பெயரில் போலியான விளம்பரங்களை நம்பி கெடுதல்களை உட்கொண்டு வரும் நாம் விரைவில் நம் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கின்றோம்.
மேலும் வண்ண வண்ண மயமான உணவுப்பொருட்களை குழந்தைகள் பார்த்தவுடன் விரும்புவதால் அவற்றில் உள்ள கெடுதல்களை அறியாமலும் அவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைய சூழலில் உடல் இளைப்பதற்காக சில மாத்திரைகளையும், சர்க்கரை நோய்க்காக சில மாத்திரைகளையும், உடலில் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக சில மாத்திரைகள் என மாத்திரை மயத்திலேயே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதை தடுத்து இயற்கை முறையில் அவர்களின் உணவில் சிறுதானியங்களை தினமும் பயன்படுத்துவதன் மூலமாக மேற்கண்ட குறைகள் நீங்குவதோடு மட்டுமின்றி மேலும் பல வகையான நன்மைகளும் வந்து சேர்கின்றன.

சிறுதானியங்கள் பொதுவாகவே ஏழைகளுக்கான உணவு என்று வர்ணிப்பது உண்டு, ஆனால் இன்றளவில் பெரும்பாலும் பணக்காரர்கள் தான் இதை அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் காரணம் அவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு தெரிந்திருக்கின்றது.
சிறு அளவிலான விலை உயர்வுகளை காரணம் காட்டி பெரும்பாலான மக்கள் கெடுதல் தரக் கூடிய தானிய வகைகளை பயன்படுத்துகின்றனர் மேலும் நோய்வாய்ப்பட்டு அதை விட அதிக அளவிலான தொகையை மருத்துவத்திற்காக செலவு செய்கின்றன.
உணவே மருந்து என்ற காலம் மாறி இன்று மருந்தே உணவு என்ற காலமாக மாறிவிட்டது.
மீண்டும் சிறுதானியங்களை உண்டால் மட்டுமே மருந்துகளில் இருந்தும் மாத்திரைகளில் இருந்தும் நிரந்தர தீர்வு காண முடியும்.
சிறு தானியங்களை உண்ணும் மனிதர்களிடத்தில் நோய்கள் மட்டுமல்ல கிருமிகளும் வைரஸ்களும் கூட நெருங்காது, ஆனால் இன்றளவில் சிறுதானியங்களை மறந்து விட்டதன் காரணமாக பல வகையான நோய்களுக்கு ஆளாகி உள்ளோம்.
இன்றைய நோய்களை சரி செய்ய ஆங்கில மருத்துவத்தை காட்டிலும் சித்த மருத்துவத்தை நாடுபவர்களின் பட்டியல் அதிகமாகவே உள்ளது.

பெரும்பாலான சித்த மருத்துவர்களில், மருத்துவர்கள் பரிந்துரைப்பது சிறுதானியங்களை மட்டுமே ஏனெனில் சிறுதானியங்களில் மட்டுமே உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தேவையான அளவில் உள்ளது.
சிறுதானியங்களில் நமக்குத் தெரிந்தவை 30 முதல் 40 வரையே உள்ளன. ஆனால் நமக்கு தெரியாமல் 500க்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் பலவகையான பயன்களுடன் உள்ளன.
பெரும்பாலான பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறி குழந்தைகள் இதை எல்லாம் எப்படி உட்கொள்வார்கள் என்பதுதான்?
ஆம் இதுவும் உண்மையான ஒன்றுதான். இன்றைய கால குழந்தைகளுக்கு சாமை, வரகு, கேழ்வரகு ஆகியவற்றை நேரடியாக கொடுத்தால் அவர்கள் உண்ணமாட்டார்கள்.
அதற்கு பதிலாகத்தான் அவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளிலும் குக்கீஸ் வகைகளிலும் இந்த சிறுதானிய கலவைகள் இடம்பெற்று விற்கப்படுகின்றன அவற்றை வாங்கி கொடுப்பதன் மூலமாக அவர்களின் உடல் ஆரோக்கியம் வலிமை பெறுவதோடு மட்டுமின்றி அவர்களின் தேவைகளும் பூர்த்தி அடைந்து விடும்.
…..
திணை முதல் பனிவரகு வரை அனைத்து வகையான சிறு தானியங்களையும் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
https://www.standardcoldpressedoil.com/barnyard-millet
மேலும் இங்கு சிறு தானியங்களால் ஆன குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், பெரியவர்களுக்கான உணவுப்பொருட்கள் சிறு தானியங்களால் ஆன இயற்கை மருந்துகள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
Originally posted 2020-02-05 19:55:21.