பொதுத் தேர்விற்கு தயாராகும் குழந்தைகளும் சரி பொதுவாகவே வேலைக்குச் செல்பவர்களுக்கும் சரி இன்றைய சூழலில் ஞாபகமறதி என்பது பெரும் பிரச்சனையாக தான் உள்ளது. தடுமாற்றம் நிறைந்த உணவு சூழலின் காரணமாக பலவிதமான நோய்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன . இதை தடுக்க பலவிதமான மூலிகை கலந்த வல்லாரை சட்னி செய்வது எப்படி என்பதை காண்போம்.
வல்லாரை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை – ஒரு கட்டு .
புதினா – ஒரு கட்டு .
கொத்தமல்லி கருவேப்பிலை -தேவையான அளவு .
இஞ்சி – ஒரு துண்டு .
பச்சை மிளகாய் – 4 .
வெங்காயம் – 2.
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் .
எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு.
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.
வல்லாரை சட்னி செய்யும் முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெங்காயம் பச்சை ,மிளகாய், இஞ்சி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி என்ன இல் சேர்க்கவும்.
பின்பு மீண்டும் கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா ,வல்லாரை ஆகிய நான்கையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு கடாயில் இருந்து வல்லாரையை இறக்கி விட்டு அரை மணி நேரம் காற்றில் ஆற வைத்து பின்பு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைக்கப்பட்ட வல்லாரை சட்னியுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறை சேர்த்து பின்பு பரிமாறலாம்.
வல்லாரை சட்னி மருத்துவ பயன்கள்:
•வயிற்று பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
•ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
•உடல் குளிர்ச்சி பெறுவதோடு மட்டுமின்றி ரத்த சோகையும் நீங்குகிறது.
மரச்செக்கு நல்லெண்ணெய் மற்றும் சமையல் பொருட்கள் வாங்க சிறந்த இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
*மேலும் தொடர்புக்கு*
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:57:03.