கடுமையான வெயில் காலத்துடன் சேர்த்து பலவிதமான நோய்களும் நம்மை தொற்றிக் கொள்கிறது .இதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நீர் சத்து அதிகமாக உள்ள உணவை உண்ணுதல் அவசியம் ,அப்படிப்பட்ட பழமைவாய்ந்த மிகச்சிறந்த உணவாக நீராகாரம் பற்றி காண்போம்.
நீராகாரம் செய்ய தேவையான பொருட்கள்:
வடித்த சாதத்தின் கஞ்சி – ஒரு கப்
தயிர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு.
வெங்காயம் பொடியாக – 1.

நீராகாரம் செய்யும் முறை
வடித்த கஞ்சியும் தயிரையும் நன்றாக சேர்த்து கலந்த பின்பு தேவையான அளவு உப்பினை சேர்க்கவும்.
ஒரு அரை மணி நேரம் இந்த கலவையை தனியாக வைத்து பின்பு வெங்காயத்துடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
காரத்தை அதிகமாக விரும்புவோர் பச்சை மிளகாயையும் சேர்த்து உட்கொள்ளலாம்.
நீராகாரத்தில் நன்மைகள்
இந்த நீராகாரம் ஆனது நமது முழுமையை தாமதப்படுத்தி நம்மை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது
நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து நோய் வருவதை தடுக்கிறது
உடலில் குளிர்ச்சியை அதிகப்படுத்தி உடலில் உண்டாகும் வெப்பச்சலனத்தை குறைக்கிறது.
இன்றைக்கும் கிராமப்புறங்களில் அதிக அளவில் இந்த நீராகாரத்தை தினமும் ஒருமுறை மக்கள் உண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இந்தக் காரணத்தினால்தான் அவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் சுறுசுறுப்பாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ,நாமும் இதை பயன்படுத்துவோம் நோய்களுக்கு சொல்வோம் குட் பைய்.
மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்கள் வாங்க சிறந்த இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:41:24.