விதவிதமான காய்ச்சல்கள் நம்மை கொன்று தின்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் அவற்றை விரட்ட இதோ வந்துவிட்டது.
இஞ்சி ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – 2
பூண்டு – 2 துண்டு
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிறு கரண்டி
கடுகு – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – தேவையான அளவு
புளி – தேவையான அளவு
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
இஞ்சி ரசம் செய்யும் முறை
தயாராக வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை அம்மியில் (உரலில்) அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி பெருங்காயம் கடுகு சேர்த்து தாளிக்கவும் பின்பு நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் அந்த கலவையில் புளி ,உப்பு சேர்க்கவும். இப்போது நறுக்கி வைத்துள்ள இஞ்சி ,சீரகம் ,பூண்டு ,மிளகு ஆகிய கலவையை சேர்த்து கொதிநிலை வந்தவுடன் இறக்கவும்.
இறக்கியவுடன் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
இப்போது சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இஞ்சி ரசம் தயார்.
இஞ்சி ரசத்தில் தனித்துவம்
பொதுவாகவே சிலருக்கு காய்ச்சலின் காரணமாக அடிக்கடி இருமல் ஏற்படும். சில நேரங்களில் அவை மாத்திரை மருந்துகளினாலும் தீர்வாக அமையும் அந்த நேரங்களில் இந்த இஞ்சி ரசம் ஆனது இருமல் பிரச்சினையை தீர்ப்பது மட்டுமின்றி காய்ச்சலுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.
முக்கிய குறிப்பு :
இஞ்சி ரசம் செய்த உடனே உண்ணுதல் மட்டுமே நல்ல பலனை தரக்கூடியது.
நெய்யினை பயன்படுத்தும் போது சுத்தமான பசு நெய்யை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.
மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்கள் வாங்க சிறந்த இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:36:55.