பொதுவாகவே நமக்கு சாதாரண காய்ச்சல் வந்தாலும் கூட அது அடுத்த 3 நாட்களுக்கு தலைவலி இருமல் உடல்வலி என்று நம் உடலில் எல்லா பிரச்சினைகளும் வந்து சேரும்.
இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல மாத்திரை மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் காய்ச்சலை குணப்படுத்துவது எப்படி என்பதை காண்போம்.
தினமும் காலையில் தேநீர் அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம் தான்.
இந்த நிலையில் காய்ச்சலின்போது தேநீரை பருகும்போது அதில் இஞ்சி, சுக்கு, ஏலக்காய் போன்ற மூலிகைகளை பயன்படுத்தி தேநீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பது மட்டுமின்றி காய்ச்சலை விரட்டும் உதவியாக அமையும்.
மேலும் தேநீருக்கு பதிலாக மூலிகை தேநீரை பயன்படுத்துதலும் காய்ச்சலை விரைவில் குணப்படுத்த உதவும்.
…
பூண்டு
பூண்டு வாயுத் தொல்லைகளுக்கும் மட்டுமில்லாமல் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
இந்த நிலையில் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உடல்நலம் குறைவாக இருக்கும்போது பூண்டை பயன்படுத்தினால் காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை விரைவில் குணமடையும்.
…
தேன்:
தேன் பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
எனவே காய்ச்சலின்போது தேனை பயன்படுத்தினால் அது உடலுக்கு சிறந்த தீர்வினை தருகின்றது.
மேலும் தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் தேனைக் கொண்டு பயன்படுத்துதல் உகந்தது.
உப்புநீர்
பொதுவாகவே உப்பை தண்ணீரில் சேர்த்து வாயைக்கொப்பளிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று கூறுவார்கள்.
அதைப்போல சூடான தண்ணீரில் தேவையான அளவு உப்பை சேர்த்து வாய் கொப்பளித்து வர நெஞ்சுபகுதியில் உள்ள சளி நீங்குவதோடு மட்டுமின்றி தொண்டையில் உள்ள புண், எரிச்சல் ஆகியவை விரைவில் குணமடையும்.
…
நீராவிபிடித்தல்
நீராவி பிடித்தல் தலையிலுள்ள நீரை போக்குவதோடு மட்டுமில்லாமல் நெஞ்சில் உள்ள சளியையும் வெளியேற்ற பயன்படுகின்றது. அதுமட்டுமின்றி சூடான காற்று மூச்சுக் குழாயில் மூலம் நுரையீரலை சென்றடைவதன் மூலமாக மூச்சுத்திணறல் குறைகிறது.
…
Originally posted 2020-03-15 18:09:18.