அது எப்படி தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினால் உடல் வலி போய்விடுமா? அதுவும் எதற்காக அந்த ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது? என்ற பல கேள்விகள் உங்களிடம் எழலாம் அப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஒரே பதில் தான் யோகாசனம்.
இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாத முந்தைய காலங்களில் அனைத்து வேலைகளையும் நாமே செய்து கொண்டிருந்தோம் அப்போது நம் உடல் வலிமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது.
ஆனால் தற்பொழுது நம்முடைய வேலைகளையும் சேர்த்து இயந்திரங்கள் செய்வதால் நாம் சோம்பேறியாக மாறுவதுடன் உடல் வலியையும் சேர்த்து பெற்றுவிட்டோம்.
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய இந்த யோகாசனம் பயிற்சியை தினமும் ஒரு மணிநேரம் நாம் செய்தால் நம் உடல் சுறுசுறுப்பாகவும் வலிமையானதாகவும் புத்துணர்ச்சி கொண்டதாகவும் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
உடலின் அனைத்து உடல் உறுப்புகளுக்கும் தேவையான மற்றும் சரியான அளவில் அசைவுகளை அளித்து அதற்கு வலிமையையும் புத்துனர்ச்சியையும் வழங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய யுத்தி தான் இந்த யோகாசனம்.
ஆன்மீகத்தின்படியும் சரி அறிவியலின்படியும் சரி இந்த யோகாசனம் உடலுக்கு மிகப்பெரிய வரம்தான் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது சூரிய கடவுளை வணங்குதல் என்ற ஆன்மீக கோட்பாடையும், அனைத்து உடல் உறுப்புகளுக்கும் அசைவு தருதல் என்ற அறிவியல் கோட்பாடையும் உள்ளடக்கி காணப்படுகிறது.
…
சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரத்தில் உள்ள 12 நிலைகளும் 12 வகையில் உடலுக்கு புதுப்புது அசைவுகளை தருகிறது மேலும் இதை காலை எழுந்தவுடன் செய்வதன் மூலமாக உடல் உறுப்புகள் அனைத்தும் வலிமையும் புத்துணர்ச்சியும் பெறுவதோடு மட்டுமின்றி ஒரு இறை அருளையும் பெற்ற உணர்வோடு அந்த நாள் இனிமையாக தொடங்குகிறது.
சூரிய நமஸ்காரத்தை தினமும் காலை 5 முதல் 6 முறை செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு வெறும் வயிற்றில் தண்ணீரை அருந்தி வயிற்றை சுத்தப்படுத்தி பின்பு சூரிய நமஸ்காரம் செய்தல் உடலுக்கு மேலும் நன்மை தரும்.
இந்த யோகாசனத்தை தினமும் செய்வதன் மூலமாக என்றும் இளமையாக இருப்பதோடு மட்டுமின்றி உடல் அழகையும் , சருமம் பொலிவையும் பெறுகிறது.
…
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 15:44:31.