முந்தைய காலத்தில் 80 வயதுகளிலும் எழுந்து நடந்து கொண்டிருக்கும் முதியவர்களின் மத்தியில் இன்றைக்கு 30 வயதை கடந்த நபர்கள் மூலையில் முடங்கிவிடுகிறார்கள் காரணம் இந்த முதுகுவலி.
சிலர் வாகனங்களில் சாய்ந்துக்கொண்டு வண்டி ஓட்டுவதினாலும், அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பதாலும் நம்மை இந்த முதுகு வலியானது விரைவில் வந்தடைகிறது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் நம் வேலையை சுருக்குவது மட்டுமின்றி நம்மை சோம்பேறிகளாக மாற்றி நம் உடலுக்கும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
வேலைகளையெல்லாம் இயந்திரங்களை செய்து கொண்டிருப்பதால் நாம் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்டதே இந்த முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும்.
உடலுக்கு அசைவுகளை கொடுக்காததினாலும் முதுகுத்தண்டு பகுதியினை ஒரே இடத்தில் சாய்த்து வைத்துக்கொண்டு இருப்பதாலும் இந்த முதுகு வலி ஏற்படுகிறது.
முதுகுவலியை தொடர்ந்து கவனிக்காமல் விட்டோமானால் அது சில நாட்களில் மற்ற நரம்புகளையும் பாதித்து பிற உடல் உறுப்புகளுக்கும் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது.
முதுகுவலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்
தினமும் குறிப்பிட்ட நேரம் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்.
காலை, மாலை என இருவேளையும் யோகா பயிற்சியும், மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
யோகா பயிற்சி செய்யும்போது மேற்கொள்ள வேண்டியவை:
யோகா பயிற்சி செய்யும் பொழுது உணவு அருந்தி இருக்கக்கூடாது, வெறும் வயிற்றில் மட்டுமே இதை செய்ய வேண்டும்.
யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியை மெதுவாக செய்ய வேண்டும் வேகமாக செய்தால் அதுவே நமக்கு பின்பு மிகப்பெரிய பிரச்சனை உண்டாக்க வாய்ப்புள்ளது
மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது மனதில் எதையும் நினைக்கக் கூடாது.
சமமான நிலையில் மனதை வைக்க வேண்டும். அதே சமயம் எந்த வித மன அழுத்தம் ,பயம் , கோபம் இருக்கக் கூடாது.
முதுகு வலியை நீக்க சிறந்த யோகா பயிற்சி:
குழந்தைகள் தரையில் தவழ்ந்து செல்வது போன்ற நிலையில் சில நேரம் நின்று மூச்சை இழுத்து விடும் சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இது முதுகுத் தண்டை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி முதுகுவலியை போக்கவும் மிகச்சிறந்த யோகாசனம் ஆகும்.
முழங்கால் போட்டு நேராக நிமிர்ந்து அமர்ந்து மூச்சை இழுத்து விட்டும் சுவாசப் பயிற்சியை மேற்கொள்வதும் மூட்டு வலியை நீக்க மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 15:56:03.