ஆண்களுக்கு முகத்தில் தாடி மற்றும் மீசை வளர்ப்பதில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அதிலும் குறிப்பாக அதை பராமரிப்பதில் மேலும் அதிக அளவில் ஆர்வம் இருக்கும். இந்த நிலையில் ஷேவிங் செய்யும் பொழுது முடியானது முகத்திற்கு உள்ளேயே வளரும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலோனோர் முகத்தை முழுவதுமாக ஷேவ் செய்து விட்டு சில நாட்களில் முகத்தில் தடியாக வீக்கத்துடன் இருப்பார்கள் அதற்கு காரணம் அவர்களின் ஷேவிங் செய்யும் முறை தான். சரியான முறையில் சேவிங் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்:
முழுமையாக சேவ் செய்வதற்கு பதிலாக முகத்தில் ட்ரிம் செய்யலாம். இதன் மூலமாக முடியின் அடிவேர்கள் நீக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் மூடி மேலோட்டமாக வளர்வதோடு தவிர வேர் பகுதியில் இருந்து மீண்டும் வளர்வதில்லை.
சேவிங் செய்யும்பொழுது சோப் போன்றவற்றை பயன்படுத்துதல் நல்லதல்ல, சிலர் ஷேவ் செய்யும் பொழுது சாதாரண முறையை மட்டுமே பயன்படுத்தி ஷேவ் செய்வதால் முகத்தில் வெட்டுக்காயங்கள் மற்றும் ஒழுங்கற்ற ஷேவிங் முறை உருவாகிறது. இதனை தடுக்க ஷேவிங் க்ரீம் அல்லது ஷேவிங் ஜெல்லை பயன்படுத்துதல் சிறந்தது.
ஒரு முறை ஷேவிங் செய்த பிளேடை மறுமுறை சேவிங் செய்ய பயன்படுத்தாதீர்கள் .ஏனெனில் சென்ற முறை பயன்படுத்திய போதே அதில் முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் சேர்த்து படிந்து விடுகின்றன. அதனை மீண்டும் நம் முகத்தில் பயன்படுத்துவதன் மூலமாக அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் நம் முகத்தில் வருவதோடு மட்டுமின்றி பலவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
ஷேவ் செய்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இதன் மூலமாக முகத்திலுள்ள மூடி மென்மையாக மாறுவதால் சுலபமான முறையில் ஷேவிங் செய்ய வசதியாக இருக்கும்.
சேவ் செய்த பின்பு முகத்தை நன்றாக பேஸ்வாஷர் கொண்டு கழுவுங்கள். முகத்தின் முடியில் படிந்திருந்த பாக்டீரியாக்கள் சருமத்தில் படிய வாய்ப்பு உள்ளது. அதனால் முகத்தை ஃபேஸ்வாஷர் கொண்டு கழுவுவதன் மூலமாக முகத்தில் இருந்து முற்றிலுமாக நீங்குகிறது.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 07:03:47.