சாதாரணமாக நமக்கு தூக்கம் வந்தவுடன் உடனே கட்டிலில் சென்று தூங்குவது தான் வழக்கம். இந்தநிலையில் நம் முகத்தை கழுவி விட்டு தூங்குவதால் நமக்கே தெரியாமல் என்னென்ன நன்மைகள் நடக்கின்றன என்பதை பற்றி காண்போம்.
பொதுவாகவே நாம் வெளியே சென்று வந்தவுடன் முகம் கை கால்களைக் கழுவுவது வழக்கம் அதைப்போல இரவில் உறங்குவதற்கு முன்பு முகம் மற்றும் கை கால்களை கழுவி அதன் மூலமாக நம் உடலில் உள்ள மாசுக்கள் அப்புறப்படுத்தபடுகிறது. அதன் மூலமாக நம் கட்டிலில் நம்முடன் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் பின்தொடர்வது தவிர்க்கப்படுகிறது.
இரவில் முகத்தினைக் கழுவுவதன் மூலமாக முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. இதன் மூலமாக முகத்தில் பருக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவதோடு மட்டுமின்றி முகம் பொலிவு பெறவும் உதவுகிறது.
இரவில் உறங்குவதற்கு முன்பு முகத்தைக் கழுவுவதன் மூலமாக கண்கள் சுத்தப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக நம் கண்களில் ஏதேனும் தூசுகள் இருந்தால் வெளியேற்றப்பட்டு இரவில் உறங்கும் பொழுது அமைதியான தூக்கம் நிலவுவது மட்டுமின்றி காலையில் எழுந்திருக்கும் பொழுது கண்கள் பளிச்சென்றும் தெளிவான பார்வையுடனும் இருக்கும்.
இரவில் முகத்தை கழுவிவிட்டு உறங்குவதன் மூலமாக முகம் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமின்றி தோல்கள் ஈரப்பதமான தசையையும் பெறுகின்றன இதன் மூலமாக முகம் பொலிவு பெறுவதோடு சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நம் முகத்தில் அழுக்கு மற்றும் தூசிகள் சேர்ந்து அவை இரவில் படிந்திருப்பதால் நம் முகம் காலையில் மந்தமாக தெரியும். இதனை தவிர்க்க இரவில் உறங்கும் பொழுது முகத்தை கழுவிவிட்டு உறங்குவதன் மூலமாக காலையில் புத்துணர்ச்சியான மற்றும் பொலிவான முகத்தைப் காணலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 07:11:20.