குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வீட்டிற்கு வரும்போது சிறந்த ஒரு ஸ்நாக்ஸ் ஆகவும், மேலும் உணவுகளுடன் தொட்டுக்கொள்ள சிறந்த சைட் டிஷ் ஆகவும் விளங்கும் வாழைக்காய் சிப்ஸ் வீட்டில் ஆரோக்கியமானதாக செய்யும் முறையை காண்போம்.
வாழைக்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
தோல் சீவிய வாழைக்காய் – 3 .
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்.
கருவேப்பிலை – தேவையான அளவு.
நல்லெண்ணெய் – தேவையான அளவு .
உப்பு – தேவையான அளவு.
வாழைக்காய் சிப்ஸ் செய்யும் முறை :
தயாராக வைத்துள்ள பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் ,உப்பு ,மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலக்கவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி தோல் சீவி வைத்துள்ள வாழைக்காயை தேவையான வடிவில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வாழைக்காகை பொரித்து எடுத்த பிறகு தயாராக வைத்துள்ள மசாலாவை அதன் மீது தூவவும்.
பின்பு கருவேப்பிலையை எண்ணெயில் போட்டு 5 வினாடிகளில் எடுத்து தூளாக்கி வாழைக்காய் சிப்ஸ் மீது தூவி விடவும்.
இப்போது சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.
உடல் ஆரோக்கியத்திற்கு வலிமை தரக்கூடியதாகவும் மேலும் கெடுதல்கள் அற்றதாகவும் உள்ள இந்த வாழைக்காய் சிப்ஸினை அனைத்து வகையான உணவுடனும் விரும்பி உண்ணலாம்.
பொதுவாகவே பொரித்து எடுக்கும் போது எண்ணெயில் மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலிமை தரக்கூடியது.
மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்கள் வாங்க சிறந்த இடம்:
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 19:59:14.