இன்று நாம் மறந்து வரும் பாரம்பரிய உணவு பட்டியல்களில் பாரம்பரிய அரிசிகள் உடன் சேர்த்து பழங்களும் மறைந்து கொண்டு வருகின்றன. ஆகவே பாரம்பரிய அரிசியையும் பழங்களையும் சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்பதை காண்போம்.
பழ ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி – கால் கிலோ .
பச்சரிசி – கால் கிலோ .
உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்.
பழ கலவைகள் (மாதுளை ,ஆப்பிள், பைனாப்பிள் ஆகிய அனைத்தும் அரைத்து) – அரை கப் .
நல்லெண்ணெய் -தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு .
நல்லெண்ணெய் – தேவையான அளவு.
பழ ஊத்தாப்பம் செய்யும் முறை
பச்சரிசி ,உளுத்தம்பருப்பு ,மூங்கிலரிசி ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்கவும் .பின்பு ஊற வைத்த அரிசியை அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைக்கப்பட்டுள்ள மாவில் நாம் தயாராக வைத்துள்ள பழ கலவைகளை சேர்த்துக் கொள்ளவும். பின் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு சாதாரணமாக ஊத்தாப்பம் செய்யும் முறை போல் அடுப்பில் வைத்து மாவை ஊத்தாப்பம் வடிவில் நெய்விட்டு சுட்டு உண்ணலாம்.
இப்போது சுவையான பழ ஊத்தாப்பம் ரெடி!
மூங்கில் அரிசிக்கான காரணங்கள்:
பாரம்பரிய அரிசிகளில் அதிக அளவிலான சத்துக்களையும் மேலும் சுவையையும் கொண்டது மூங்கில் அரிசி பல வகையான இடங்களில் தற்போது இது கிடைக்காத போதிலும் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நல்ல விலைக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது .மேலும் இதில் அதிக அளவிலான சத்துக்கள் உள்ளதால் இந்த அரிசியை பழங்களுடன் சேர்த்து ஊத்தாப்பம் செய்து உண்பதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதோடு மட்டுமின்றி தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெறலாம்.
மூங்கில் அரிசி கிடைக்கும் இடம் :
*ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-05 20:01:03.