இன்றைய ஒவ்வொரு கால நிலைக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் நம்மை அண்டிகொண்டிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக காய்ச்சல்களில் பலவிதமான காய்ச்சல் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அந்த விதவிதமான காய்ச்சல்களிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்.

வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பினை சேர்த்து நன்றாக கலக்கி தினமும் இரண்டு முறை வாய் கொப்பளிக்க வேண்டும் .
இதன் மூலமாக தொண்டை கரகரப்பு நீங்குவதோடு மட்டுமின்றி நம் உடலில் தங்கியுள்ள சளி தொல்லைகளும் விரைவில் நீங்கும்.
காய்ச்சல் ஏற்படும் பொழுது நம் உணவுப் பொருட்களில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணமாக பயிறு உணவுகள், முட்டை ,இறைச்சி ஆகியவற்றை நாம் அதிகமாக உண்பதன் மூலமாக அதில் உள்ள துத்தநாக சத்து நம் உடலில் காய்ச்சலை நீக்க உதவியாக அமையும்.
காய்ச்சல் ஏற்பட்ட சமயங்களில் தினமும் இரவு நேரத்தில் நீராவி பிடித்தல் மற்றும் சுத்தமான கைக்குட்டைகளை பயன்படுத்துதல் கைகளை அடிக்கடி கழுவுதல் முகத்தில் ஏற்பட்டுள்ள கிருமிகளையும் சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்வதன் மூலமாக காய்ச்சல் உடனடியாக குணமடைவது மட்டுமின்றி நம்முடைய குடும்பத்தையும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவும்.

காய்ச்சலின் போது மிகப்பெரிய தொல்லையாக நமக்கு அமைவது சளி மற்றும் இருமல் தான் இவை இரண்டும் நீங்கி விட்டாலே பாதி பாரம் குறைந்தது போன்ற நிலை உண்டாகிவிடும் அப்படிப்பட்ட நிலையில் எண்ணெய் ஒரு மிகப்பெரிய வரம் தான் எண்ணெயை நன்றாக சூடு செய்து நெஞ்சுப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் தடவுவதன் மூலமாக சளி உடலிலிருந்து வெளியேறுவதோடு மட்டுமின்றி இருமல் பிரச்சனையும் தீர வழி வகுக்கும்.

கெட்ட பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் அழிக்க உதவியாக உள்ள உணவுப் பொருள் தேன் ஆகும். தேனினை சூடான நீரில் அல்லது உணவு பொருட்களில் சேர்த்து உண்பதன் மூலமாக காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை உடனடியாக தீரும்.
சளி ஏற்பட்ட நேரங்களில் சூப் உணவுகளை அதிகமாக உண்பதன் மூலமாக நெஞ்சு சளியானது விரைவில் வெளியேற உதவுகிறது.
மேலும் மூலிகை தேநீர் மற்றும் மூலிகை கசாயம் போன்றவையும் உடலுக்கு மிகுந்த வலிமையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 16:19:41.