இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் நச்சுத் தன்மை கொண்டவையாகவும் வேதிப்பொருட்களை உள்ளடக்கியதாகும் உள்ளன.
இவை நம் முகத்திற்கு அழகு தருவது போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் பின்பு சரும கேடுகளை ஏர்படுத்தக்கூடியவை ஏனெனில் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் நம் சருமத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி பலவிதமான குறைபாடுகளை சருமத்தில் உண்டாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது குறிப்பாக அழகுசாதனப் பொருட்களை கண்டுபிடிப்பதற்கு முன்பு நம் நாட்டு பெண்கள் அழகு சாதனப் பொருட்களாக சமையல் பொருட்களை பயன்படுத்தி வந்தனர் இது ஒரு வியப்பிற்குரிய விஷயம் என்றாலும் கூட அதுவே உண்மை.

சருமம், தலைமுடி, நகம், பற்கள் போன்ற அனைத்து உடல் உறுப்புகளிலும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகு பெற்றனர்.
குறிப்பாக வெற்றிலை ,கருவேப்பிலை, கோதுமை , பயிறு, வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி முகப் பொலிவினை மிளிர செய்தனர்.

பசு மாட்டின் சாணம் மற்றும் சிறுநீரை கூட அழகுப் பொருட்களாக பயன்படுத்தினார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை தான் மாட்டுச் சாணத்தில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி உள்ளது.
இவை முகத்தில் உண்டாகக்கூடிய பருக்கள் தேமல்கள் மேலும் சில குறிப்புகளை அகற்றுவதோடு மட்டுமின்றி முகத்திற்கு நல்ல பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.
நம் வீட்டில் கொண்டாடப்படும் அனைத்துவித விழாக்களிலும் இந்த வெற்றிலை இல்லாமல் நிச்சயமாக இருக்காது.
அப்படிப்பட்ட வெற்றிலை நம் முகத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும் ஏனெனில் இதில் உள்ள சில சத்துக்கள் நம் முகத்தில் பருக்களை நீக்குவது மட்டுமின்றி நம் முகம் பொலிவு பெறவும் உதவியாக அமைகிறது.
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தை பிடிப்பது கருவேப்பிலை .
நம் நாட்டு உணவுகளில் அதிக அளவில் இடம் பெறும் கருவேப்பிலை கூட முக அழகிற்க்காக பயன்படுத்தப்பட்ட ஒரு அழகு சாதனப் பொருட்கள் தான்.
இன்றும்கூட பல விதமான சோப்புகளிலும் அழகுசாதன பொருட்களிலும் கருவேப்பிலை கலந்தே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தலைமுடி நன்றாக வளரவும் முடி நன்றாக வலிமை பெறவும் இது உறுதுணையாக அமைகிறது.
பொதுவாகவே வெந்தயம் என்பதே வயிற்று கோளாறுகளை நீக்க மிகச்சிறந்த உணவாகும் .ஆனால் இதே முகத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைக்க பயன்படுத்தப்படுகிறது.
நம் முகத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்கவும் முகத்தின் அழகு அப்படியே நீடித்து நிற்கவும் வெந்தயத்தை நம் உணவுகளில் பயன்படுத்தலாம்.
…
Originally posted 2020-03-02 16:07:41.