“நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை”னு பெருமையா சிலர் சொல்லிப்பாங்க.
இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது நல்லது.
ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது அதிலிருக்கிற கெடுதல் தன்மை உடல்ல சேர்ந்துட்டே இருக்கும்.
அதனால எண்ணெய்கள்ல இருக்கிற நற்குணங்கள் மட்டுமே உடம்புல சேரணும்னா… எல்லா வகை எண்ணெய்களையும் மாத்தி மாத்தி கொஞ்சமா பயன்படுத்தணும்.
இதயத்துக்கு நல்லதுங்கிற விளம்பரத்தோட மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீஃபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை.
எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
ஒரே எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தினா தீங்கானதுதான். அதனால சமையலுக்கான எண்ணெய் வகையை அடிக்கடி மாத்திக்கிறது நல்லது.
கொழுப்புல தாவர கொழுப்பு, மாமிச கொழுப்புனு ரெண்டு வகை இருக்கு.
எள், தேங்காய் மற்றும் கடலை போன்ற தாவரங்கள் மூலம் எடுக்கக்கூடிய எண்ணெய்கள்ல இருக்கற கொழுப்பு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இந்தக் கொழுப்பு ரத்தக்குழாய்கள்ல நேரடியா படிஞ்சு அதிக பாதிப்பைத் தராது.
தேங்காய் எண்ணெய்
உதாரணமா, தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்னு பலரும் ஒதுக்கி வைக்கிறாங்க.
ஆனா, கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துறாங்க. இதயநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்ற மாநிலத்தைவிட, கேரளத்தில் அதிகமாக இல்லைனு ஆய்வுகள் சொல்லுது.
இதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம், நன்மைகள் பலவும் அடங்கியிருக்கிற தேங்காய் எண்ணெயை, உணவில் சேர்க்கக்கூடாதுங்கறது எந்த அளவுக்கு தவறான கருத்துனு..!
இன்னொரு பக்கம், இறைச்சி, இறால் போன்ற மாமிச உணவுகளாலும் உடல்ல கொழுப்பு சேருது.
இதைக் கட்டுப்படுத்தாம, எண்ணெயில் மட்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வர்றதுல எந்தப் பயனும் இல்லை.
அதனால எல்லா எண்ணையையும் மாத்தி மாத்தி பயன்படுத்துங்க.
ஒரு வாரம் கடலை எண்ணெய் பயன்படுத்துங்க.. அடுத்த வாரம் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்க..
…..
Originally posted 2017-05-30 12:34:21.