இனிவரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் நிச்சயமாக ஏற்படக்கூடிய ஒன்று.
இந்த நிலையில் நமக்குத் தேவையான நீரை சேகரித்தால் மட்டும்தான் நம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபடமுடியும்.
காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் தண்ணீர் என்பது நிச்சயமாக தேவைப்படுகின்றது.
இந்த நிலையில் நம் வாழ்நாளில் தண்ணீரை தேவையற்ற செயல்களுக்கும் அதிகளவில் ஆகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் அவற்றை எவ்வாறு குறைத்தால் எவ்வாறு தண்ணீரை சேமிக்கலாம் என் பார்ப்போம்.
குளியலறை சிக்கனம்
முகம் கழுவும் பொழுது தண்ணீரை வீணாக திறந்துவிட்டு முகம் கழுவுவது இன்றைக்கும் பலரது வழக்கமாகவே உள்ளது. இந்த நிலையில் நம் முகம் கழுவும் நீரை தவிர மற்ற தண்ணீர் வீணாக தான் செல்கின்றன .
இந்த நிலையில் ஒரு பாத்திரத்திலோ அல்லது வாலியிலோ நீரை பிடித்து அதன்மூலம் பயன்படுத்துவதன் மூலமாக நீரை சேமிப்பது மட்டுமின்றி நீரை அளவாகவும் பயன்படுத்த உதவும்.
மேலும் ஷவர் திறந்து விட்டு குளிப்பதன் மூலமாக தண்ணீரானது அதிகளவில் வீணாகின்றன.
இந்த நிலையில் கோடை காலத்தில் நீரை அளவாக பயன்படுத்தும் போது ஷவர் பயன்படுத்தாமல் இருத்தல் மேலும் நன்மை தரும்.
…
துணி துவைக்கும் போதிலும் சமைத்த பாத்திரங்களை துலக்கும் போதிலும் அதிக அளவிலான தண்ணீர் பயன்படுத்துவது இன்றைக்கும் பலரிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் துணி துவைப்பவர்கள் வாஷிங்மெஷினில் மொத்தமாக போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து துனி துவைப்பதன் மூலமாக நீர் சேமிப்பதோடு மட்டுமின்றி பாத்திரம் துலக்கும் பொழுது தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்துதல் மேலும் நீரை சேகரிக்க உதவும்.
…
வீட்டில் தோட்டம் வைத்திருக்கும் பலரும் அதற்கு தனியாக தண்ணீரை ஊற்றி பராமரிப்பது வழக்கம்.
இந்த நிலையில் நாம் சமையலுக்குப் பயன்படுத்திய நீரை செடிகளுக்கு ஊற்றுவதன் மூலமாக செடிகளுக்கு உரமாக தோடு மட்டுமின்றி நீரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
…
இந்த கோடைகாலத்தில் தண்ணீரை அளவாக பயன்படுத்தவும் மேலும் தண்ணீர் குறைபாட்டை தவிர்ப்போம்….
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 20:08:53.