சர்க்கரை என்றவுடன் அனைவருக்கும் தெரிவது உணவுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பது மட்டும்தான்.
ஆனால் சர்க்கரையின் பயன்கள் எண்ணிலடங்காதவை, நாம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் மாற்றுப் பொருளாக இந்த சர்க்கரை பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் ஆனால் அதான் உண்மை அத்தகைய சர்க்கரை எந்தவித நமக்கு நன்மையை தருகின்றன என்பதை காண்போம்.
கரைகளை அகற்ற
நமக்கு பிடித்த ஆடைகளில் கறை ஏற்பட்டால் அதை விட மனத்துன்பம் எதுவுமே இருக்காது.
அப்படிப்பட்ட நிலையில் அந்த ஆடைகளை தோய்த்தாலும் அந்த கறைகள் போகவில்லையா? கவலைப்படாதீர்கள்.
சர்க்கரையை தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கி அதை அந்த துணியின் கறை பட்ட இடத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
பின்பு அதை எப்பொழுதும் துணி துவைப்பது போல தோய்த்தால் கறை மறைந்து விடும்.
என்னதான் வீடுகள் சுத்தமாக இருந்தாலும் அந்த வீடுகளில் கரப்பான்பூச்சி ஏதாவது ஒரு மூலையில் நிச்சயமாக ஒளிந்திருக்கும் அந்த நேரத்தில் அதன் மூலமாக நம் வீட்டில் உள்ளோருக்கு நோய் பரவும் வாய்ப்புள்ளது.
இதை தடுப்பதற்காக நம் பல வேதிப் பொருட்கள் நிறைந்த கரப்பான் பூச்சி சாக்பீஸினை பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
அதை தடுப்பதற்காக இந்த சர்க்கரையை பயன்படுத்தலாம்.
சர்க்கரையையும் பேக்கிங் பவுடரையும் சமமான அளவில் கரப்பான் பூச்சி அதிக அளவில் உள்ள இடங்களில் தூங்குவதன் மூலமாக கரப்பான்பூச்சி அழிவது மட்டுமின்றி நம் இல்லமும் ஆரோக்கியமாக இருக்கும்.
…
பூக்கள் ஆயுள் அதிகரிக்கும்
தங்களுடைய தோட்டத்தில் பூத்த பூக்களை ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் இருந்தால் அதை மறந்துவிடுங்கள் ஏனெனில் அதையும் இந்த சர்க்கரை கொண்டு மாற்றலாம்.
ஒரு குடுவையில் சர்க்கரையையும் வினிகரையும் சமமான அளவில் சேர்த்து அதில் தோட்டத்தில் பூத்த பூக்களை வையுங்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பூக்கள் ஆரோக்கியமானதாகும் பொலிவுடனும் மலர்ந்திருக்கும்..
…
உதடுகளில் பராமரிப்பு
உதடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் நபர்கள் அடிக்கடி தங்கள் உதடுகளின் நிறத்தை பாதுகாப்பதற்காக லிப்ஸ்டிக்கை பயன்படுத்திக் கொண்டே இருப்பது வழக்கம் .இந்நிலையில் லிப்ஸ்டிக்கில் சிறிதளவு சர்க்கரையை தூவி உடனடியாக அதை நீக்கிவிட லிப்ஸ்டிக்கின் ஆயுள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி உதடுகளிலும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் நிறம் பொலிவு பெறும்.
…
மேலும் உடல் மேனியை பொலிவுபடுத்தவும் ,அரைக்கும் இயந்திரங்களை சுத்தம் செய்யவும் இந்த சர்க்கரையானது பயன்படுத்தப்படுகின்றது.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
Originally posted 2020-03-12 19:49:50.