இன்றைய சூழலில் பலருக்கும் பல விதத்தில் வாயுத் தொல்லைகள் அமைந்து கொண்டிருக்கின்றன.
அவர்களது உணவு பழக்கங்களின் காரணமாகவும் நேரத்திற்கு உணவு உண்ணாதது காரணமாகவும் வாயு தொல்லை அவர்களை வாட்டி வதைக்கின்றது.
இதிலிருந்து தப்பிக்க என்னென்ன உணவுகளை உண்ணலாம் என்பதைப்பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
இஞ்சி
பொதுவாகவே இஞ்சி பல மூலிகை குணங்கள் நிறைந்த ஒரு மருத்துவ பொருள்.
அத்தகைய இஞ்சியை பயன்படுத்தி தினமும் காலையில் தேநீர் பருகிவந்தோம் என்றால் வாயுத்தொல்லை முற்றிலுமாக நீங்கும்.
இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்தால் மேலும் ஆரோக்கியத்தையும் சூட்டலாம்.
ஓம வாட்டர்
பொதுவாகவே இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துவது வழக்கம் .
அஜீரனம் காரணமாகவும் செரிமானமின்மை காரணமாகவும் ஓம வாட்டர் பயன்படுத்துவது வழக்கம்.
இதைப்போலவே வாயுதொல்லை நீங்கும் ஓமவாட்டரை பயன்படுத்துவது நல்ல பலனை தரும் .
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரி ஸ்பூன் ஓமம் வாட்டரை கலந்து பருகலாம்.
…
புதினா
புதினாவும் ஆனது வயிற்று வலி நெஞ்சு எரிச்சல் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமின்றி வாயு பிரச்சனைகளையும் தீர்க்க வழி செய்கின்றது.
புதினா தேநீர் அல்லது புதினா சாதம் செய்து அதன் மூலமாக வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
…
மோர்
மோர் உணவும் வாயு பிரச்சனையை நீக்க வழிவகுக்கின்றது.
மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றது.
…
நெல்லிக்காய்
நெல்லிக்காய் கூட வாயு பிரச்சனையை நீக்க ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.
தினமும் நெல்லிக்காய் ஊறுகாயை பயன்படுத்துவதன் மூலமாக வாயு பிரச்சனை நீக்குவதோடு மட்டுமின்றி மலச்சிக்கல் பிரச்சனையும் குனமாகும்.
பொதுவாகவே வயிற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகள் அனைத்து நீக்குவதற்கு எலுமிச்சைச்சாறு மிகப்பெரிய மருத்துவ பொருள்தான்.
இந்தநிலையில் வயிற்றுக் கோளாறு மற்றும் வாயு பிரச்சனை ஏற்படும் போது எலுமிச்சை சாறு குடித்து வர வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து குடித்து வர அஜீரணத்திலிருந்து விடுபடுவது மட்டுமின்றி வாயுத் தொல்லை மற்றும் செரிமான பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
வயிற்றில் உள்ள உணவுகளை சரியான முறையில் சரிபடுத்த தயிர் உதவிகிறது. தினமும் அல்லது வாரத்தில் 3 முறை உணவில் தயிரை சேர்த்து உன்பதன் மூலமாக வயிறு சீரான நிலையில் செயல்படுவதோடு மட்டுமின்றி அனைத்து விதமான செரிமானப் பிரச்சனைகளில் இருந்தும் உடனடியாக தீர்வு காணலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 19:27:43.