மாறுபட்ட உணவு சூழலில் மீண்டு பழைய நிலைக்கு திரும்பி ஆரோக்கியமான, ருசியான உணவுகளை உண்பது என்பது மிகவும் கடினம்தான். அதையும் தாண்டி ஆரோக்கியமான ராகி ஊத்தாப்பத்தை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.
*ராகி ஊத்தாப்பம் செய்யத் தேவையான பொருட்கள்:*
ராகி மாவு – ஒரு கப்
சீரகம் – கால் டீஸ்பூன்
இஞ்சி – தேவையான அளவு
பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காய தூருவல் – தேவையான அளவு
குடை மிளகாய் – தேவையான அளவு
தக்காளி – ஒன்று பொடியாக.
*ராகி ஊத்தாப்பம் செய்யும் முறை:*
தயாராக வைக்கப்பட்டுள்ள தயிர் சீரகம் இஞ்சி ராகி மாவு பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் நன்றாக தோசை மாவு விதத்தில் கலக்கவும்.
பின்பு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது நாம் பொடியாக்கி தயாராகி வைத்துள்ள தக்காளி வெங்காயம் ஆகியவற்றை அதன் மீது தூவவும். தேவைப்பட்டால் குடை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது தோசை சுடும் விதத்தில் ஊத்தப்பத்தை ஊத்தி சூடாகவும் சுவையாகவும் பரிமாறலாம்.
*ராகி ஊத்தாப்பத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகள்*
•குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
•மன அழுத்தம் குறையும்.
•தோல் நோய்கள் நீங்கும்.
•உடல் சூடு நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.
•உடல் எடையை குறைக்க உதவும்.
•பற்கள் மற்றும் எலும்புகளை பலமாக்க உதவும்.
சிறுதானிய வகைகள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
*மேலும் தொடர்புக்கு*
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-24 15:51:59.