ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு குழந்தைக்கு தாயாகும் போது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியத்தை அடைந்ததாக எண்ணுகிறார். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு ஆரோக்கியமான மற்றும் குழந்தைக்கு சத்தான உணவு பொருட்கள் என்னென்ன ?? காண்போம்.
ஆரம்ப நிலை:
பெண்கள் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
பின் பெரியோர்களின் அறிவுரையோடு எந்த உணவுகள் சிறந்தது என்பதை கேட்டறிந்து உண்ணுதல் நன்று.
மேலும் முதல் மூன்று மாதங்களில் உணவுகளில் ஒருவித வெருப்புத்தன்மை ஏற்ப்படும் , அதற்காக உணவுகளை வெறுக்காமல் அளவாக உண்ணுதல் வேண்டும்.
கர்பினி பெண்கள் உணவு முறை:
கர்ப்ப காலத்தில் பெண்கள் பழவகைகளை அதிகமாக சாப்பிடுதல் அவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க வழிவகுக்கும்
பழங்களை அதிகமாக விரும்பாதவர்கள் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் உலர்ந்த பழ வகைகளை உண்ணலாம்.
தினமும் அல்லது வாரத்தில் 5 முறை உணவில் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளுங்கள் சிறந்தது. (முட்டை சமைத்த தாக இருக்க வேண்டும்) சமைக்காத முட்டை கருவுற்ற பெண்களுக்கு நல்லதல்ல.
தானியங்கள், பால் பொருட்கள், மீன் வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதோடு குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான அளவில் சென்றடைகின்றன.
மேலும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் சத்துக்கள் அதிகரிப்பதோடு உடல் விரைவில் சோர்வடைவதை தடுக்கவும் உதவுகிறது.
கருவுற்ற பெண்கள் தவிர்க்கவேண்டியது:
கருவுற்ற பெண்கள் இரசாயன குளிர்பானங்கள் மற்றும் பச்சை இறைச்சி வகைகள், காபி, டீ, ஆகியவற்றை தவிர்த்தல் நலம்.
முதல் மூன்று மாதங்களில் பெண்கள் பப்பாளி மற்றும் அண்ணாச்சி பழம் ஆகியவற்றை அறவே தவிர்த்தல் வேண்டும்.
கருவுற்ற பெண்கள் செய்யவேண்டியது:
காலை, மாலை என இரண்டு வேளையும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.
தினமும் நன்றாக தூங்க வேண்டும் குறைந்தது 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை தூங்குதல் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
தினமும் காலை தூய காற்றில் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் பிரசவத்தின் போது சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
உங்கள் குழந்தை இந்த உலகத்தை காணட்டும் ஆரோக்கியத்துடனும் அன்புடனும்…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-04 15:14:57.