கடல் உணவுகளில் மீன், இறால் போன்றஉணவுகளை விரும்பி உண்ணும் ரசிகர்கள் பலர். அதிலும் இறால் விலை அதிகம் என்றாலும் அதை தேடித்தேடி வாங்கும் அளவிற்கு இறால் உணவின் ருசியும் சுவையும் அவர்களை வெகுவாக கவர்கிறது. அப்படிப்பட்ட சுவையான இறால் குழம்பு வைப்பது எப்படி என்பதை காண்போம்.
இறால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- இறால் – ஒரு கிலோ
- தேங்காய் பால் – ஒன்றரை கப்
- இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 4
- தக்காளி – 4
- மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
இறால் குழம்பு செய்யும் முறை:
- சுத்தம் செய்த இறாலில் லேசாக உப்பு சேர்த்து தண்ணீரில் நன்றாக வேகவைக்கவும் பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.
- கடாயில் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் .பின்பு தக்காளி மசாலா தூள்கள், பச்சைமிளகாய், உப்பு, ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறவும் .சிறிது நேரம் நன்றாக கிளறிய பிறகு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
- இறுதியாக வேக வைத்த இறாலை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும்.
- தேவைக்கேற்ப தேங்காய் பால் சிறிது சேர்த்துக்கொண்டு மேலும் ஒரு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- பின்பு அடுப்பிலிருந்து கடாயை இறக்க சூடான சுவையான இறால் குழம்பு ரெடி.
நெய், மரச்செக்கு எண்ணெய்கள் வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-09 12:56:39.