ஆண்களும் சரி பெண்களும் சரி முகத்தில் முகப்பருக்கள் வந்துவிட்டாலே அதை எப்படியாவது போக்கி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல விதமான க்ரீம்களையும் ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசி முகத்தின் பளபளப்பை அழிப்பதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு பல விதமான பக்க விளைவையும் ஏற்படுத்துகின்றனர் .
இதையெல்லாம் தடுத்து இயற்கையான முறையில் முகத்தை பிரகாசிக்க வைப்பது எப்படி என்பதை காண்போம்.
தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
சிறிய வயிற்றுவலி முதல் உடல் குறைப்பு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் தேன் உடல் சருமத்திற்கும் ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது.
இதனை உணவில் பயன்படுத்துவதன் மூலமாக முகம் பொலிவு பெறுவது மட்டுமின்றி முகப்பருக்கள் மறைய தொடங்கும்.
தேனை முகத்தில் அப்ளை செய்தும் பயன்படுத்தலாம்.
முகம் பொலிவு பெற ஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும் சமமான அளவு ஒரு கிண்ணத்தில் சேர்த்து பஞ்சு கொண்டு முகத்தில் அப்ளை செய்யவும்.
காய்ந்த பிறகு தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி விடவும் வாரம் மூன்று முறை இதை தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து ஜில்லென்ற தண்ணீரில் முகத்தை கழுவி வர சருமம் பளிச்சென்று மட்டுமின்றி முகப்பருக்களும் மறையும்.
முல்தானி மெட்டி பவுடர் மற்றும் தேன் ஆகியவற்றை சமமான அளவில் பேஸ்ட் போல உருவாக்கி அதை முகத்தில் தேய்த்து அரைமணி நேரத்தில் நன்றாக கழுவிய பின் முகத்தில் எண்ணெய் பசைகள் அழிந்துவிடும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனை சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கி முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரை கொண்டு கழுவி வர முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் நீங்கும்.
கெமிக்கல் நிறைந்த முகப்பவுடர் களையும் முக பேஸ்ட் களையும் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் தேனைக் கொண்டு முகத்தை பளபளப்பாக்குவோம்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-12 07:15:41.