அனைவரது வீட்டிலும் நிச்சயமாக ஒரு செடி அல்லது மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் .
அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினாலும் மேலும் மண் வளம் இல்லாத காரணத்தினாலும் பலர் அந்த ஆசைகளை நிராகரிப்பது உண்டு.
ஆனால் இனி அந்த கவலை இல்லை இதோ உங்கள் வீட்டு மாடியிலேயே வைக்கலாம் அசத்தலான மாடித்தோட்டம்.

மாடித்தோட்டம் அமைக்கும் முறை:
வீட்டின் மொட்டை மாடியில் காலியாக இருக்கும் இடத்தில் தொட்டியை வைத்து அதில் மண்ணை நிரப்பி தங்களுக்கு விருப்பமான விதைகளை போட்டு அழகான மாடி தோட்டத்தை உருவாக்கலாம்.
மாடித்தோட்டம் உருவாக்கும்போது மொட்டைமாடியில் வெயில் படும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

மாடி தோட்டத்திற்கான விதைகள் எங்கு கிடைக்கும்:
தமிழக அரசு மாடி தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மாடித் தோட்டத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் 300 ரூபாய்க்கு வழங்குகிறது.
இதை நாம் வெளியில் வாங்கப் போனால் 700 ரூபாய்க்கும் மேற்பட்டதாக இருக்கும்.
மாடித் தோட்டத்திற்கு உரத்தை பெறுவது எப்படி?
நம் வீட்டில் அன்றாட உணவு பட்டியலில் வீணாகும் உணவு கழிவுகளை நாம் உரமாக பயன்படுத்தலாம் மேலும் உணவு கழுவிய தண்ணீர் அழுகிய காய்கறிகள் ஆகியவற்றையும் நாம் உரமாக பயன்படுத்தலாம்.
இனி நம் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்களை குப்பையில் கொட்ட வேண்டிய அவசியமும் இல்லை அதே சமயத்தில் நம் ஆசைக்கேற்ப வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து அதில் வரும் காய்கறிகளை நாம் இயர்க்கை உணவுப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 9677227688
வலைதள விவரம் : https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-29 19:15:29.