பெரும்பாலும் நம் வாழ்நாளில் தினமும் பயன்படுத்தப்படும் உணவு பட்டியலில் பால் என்பது முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் .
அப்படிப்பட்ட பாலுடன் பசலைக்கீரையை சேர்த்து உண்டால் ஏற்படும் விளைவுகளை நீங்கள் அறிவீர்களா?
பால் ஒரு கால்சியம் நிறைந்த உணவுப்பொருள் இதை தினமும் காலையிலும் மாலையிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துவது வழக்கம் அப்படிப்பட்ட நிலையில் பசலைக்கீரையை இதையும் சேர்த்து உண்பதினால் என்ன நடக்கும்?
பாலில் கால்சியம் அதிக அளவு உள்ளது போல பசலைக்கீரையிலும் கால்சியமானது அதிக அளவில் உள்ளது.
இவை இரண்டும் உடலுக்கு அதிக அளவிலான கால்சியத்தையும் கொண்டு சேர்க்கிறது, இதன் மூலமாக நம் உடலில் சில அபாயத்தை ஏற்படுத்துவதாக கூறினாலும் அது உண்மை அல்ல .
இது சிறுநீரக கல் உருவாக்கத்தின் அபாயத்தை குறைக்கிறது என்று சொல்லலாம்.
அதிக அளவிலான கால்சியம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து ஆக்சாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நம் சிறுநீரகப் பகுதியில் உருவாகும் கல்லின் அபாயத்தை குறைக்க முடியும் இது நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகவே அமைகிறது எனவே பசலைக் கீரையுடன் சேர்த்து உட்கொள்வது நன்மை பயக்கக் கூடிய ஒன்றாகும்.
பொதுவாக பசலைக் கீரையுடன் பாலை சேர்த்து உண்ணக் கூடாது என்ற கட்டுக்கதை யாகவே இருந்தாலும்கூட பசலைக் கீரையுடன் அதிக அளவில் உண்ணக்கூடாது என்பது ஆயுர்வேதத்தின் கூற்றாகும்.
என்னதான் உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவாக அமைந்தாலும் அதை அளவுடன் உண்டால் மட்டுமே அமிர்தமாகும்.
…
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-03-02 16:12:41.