பொதுவாகவே நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் ,ஆனந்தமாகவும் வாழ அதிகம் தினை வகை உணவுகளை உண்ணுதல் அவசியம்.
தினை அடை செய்ய தேவையான பொருட்கள் :
தினை – 100 கிராம்
பச்சரிசி – 300 கிராம்
தேவையான பருப்பு வகைகள் ( கடலை மற்றும் துவரை என உங்கள் விருப்பம்) – 150 கிராம்
காய்ந்த மிளகாய் , தேங்காய் , – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – தேவையான அளவு ( பெருங்காயம் ஒற்றுக்கொள்ளாதவர்கள் இதை பயன்படுத்தல் தவிர்க்கலாம்)
நல்லெண்ணெய் – 100 மி.லி.
தினை அடை செய்முறை :
பொடியாக்கப்பட்ட தினை மாவினை தயாரான நிலையில் வைக்கவும்.
மேலும் தண்ணீரில் பருப்பு வகைகளை 1 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் பருப்புவகைகளுடன் மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இப்போது பொடியாக்கப்பட்ட தினை மாவினை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின்பு அந்த மாவின் கலவையில் பருப்பு கலவையை சேர்க்கவும்.
இறுதியாக தேங்காய் சேர்த்து நன்கு மாவினை கலக்கிவிட்டு அடை கடாயில் அடை சுட்டு நல்லெண்ணெய் விட்டு எடுக்கலாம்.
இப்போது சூப்பரான தினை அடை ரெடி:.
இதை சமைத்த விரைவில் உண்டால் மட்டுமே அதன் ஆரோக்கியத்தை அடைய இயலும்.
சிறுதானிய வகைகள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம் :
ஸ்டேண்டர்டு ஸ்டோர்*
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
*மேலும் தொடர்புக்கு*
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-01-24 15:48:04.