பொதுவாகவே மிளகு வடையை வீட்டில் விசேஷ காலத்திலும் மேலும் இறைவனுக்கு படைப்பதற்கும் செய்வது வழக்கம். அதுமட்டுமின்றி மிளகு ஓர் இயற்கை பொருந்திய மருத்துவ உணவு அகும்.
அப்படிப்பட்ட மிளகில் உணவுவகை செய்து சாப்பிட்டோமென்றால் தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் மட்டுமின்றி சளி, இருமல் போன்ற பிரச்சனைகளையும் விரட்டி அடிக்கிறது.
மிளகு வடை செய்ய தேவையான பொருட்கள்:
- உளுந்து – 100 கிராம்
- மிளகு – ஒரு டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 250 கிராம்
- அரிசி – அரை டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
மிளகு வடை செய்யும் முறை:
- சுத்தமான பாத்திரத்தில் உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு உளுந்தை தண்ணீரிலிருந்து எடுக்கவும்.
- இப்போது உளுந்தையும் தயாராக வைத்துள்ள அரிசியையும் சேர்த்து மாவு பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அரைத்து வைத்துள்ள மாவில் உப்பையும், மிளகையும் சேர்த்து மீண்டும் மாவாக அரைத்து வேண்டும்.
- இறுதியாக மாவை மெல்லிய வடை வடிவில் தட்டி நல்லெண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான மிளகு வடை ரெடி!
- நல்லெண்ணெய் பயன்படுத்தும் பொழுது மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
- இந்த மிளகு வடையை மாலையாக சேர்த்து ஆஞ்சநேயருக்கு போடுவதன் மூலமாக ஆன்மீக ரீதியான நன்மை வந்து சேரும்.
மரச்செக்கு எண்ணெய்களை வாங்க சிறந்த இடம்:
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
மேலும் தொடர்புக்கு, அழைப்பு எண்: 09677227688
வலைதள விவரம் : https://standardcoldpressedoil.com/
Originally posted 2020-02-09 17:50:22.