மரச்செக்கு எண்ணையின் மகத்துவம்!

1 sec read

sesame oil

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்.. இதற்கு நல்ல தீர்வு தான் மரச்செக்கு எண்ணெய் ..

….

1. மரச்செக்கு எண்ணையின் ஊட்டசத்துக்கள்

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.

இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதில் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான

  • புரோட்டீன்கள்
  • வைட்டமின்கள்
  • தாதுப்பொருள்கள்
  • நார்ச்சத்துக்கள்
  • குளோரோபில்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • காப்பர்
  • இரும்பு
  • பாஸ்பரஸ்
  • வைட்டமின் ” இ ”

போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக “நல்ல எண்ணெய்” என்று சொன்னார்கள்.

வெளிநாட்டில் கூட இதை ” Queen of Oil ” என்று அழைக்கிறர்கள்.

…..

2. மரச்செக்கு தேங்காய் எண்ணையின் பயன்கள்

இன்று நாம் அணைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறோம், ஆனால் இன்றளவும் கேரளா மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலுக்கு பயன்படுதிகின்றனர்.

அதனால் தான் அவர்களுடைய தலை முடி கரு கருவென்று நீளமாக உள்ளது, ஆனால் அவர்களை விடவும் நமது முடி கருமையாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் மக்கள் தலைசாயத்தை உபயோகிகிறார்கள் இன்றைய தமிழ் நாட்டு மக்கள்.

ஆனால் நாமோ சமையலுக்கு நல்ல மனத்தையும் , சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய்எண்ணையை விடுத்து கண்ட கண்ட எண்ணைகளை நாடி செல்கிறோம்.

ஆனால் நமது மக்கள் அதிலும் ஒரு இரசாயன கலப்படத்தைச் செய்கின்றனனர். அது தான் சல்பர். அது ஏன் கலக்குகிறார்கள்..? எண்ணெய் விரைவில் கெடாமல் இருக்கவும். வெண்மை நிறமாக இருக்கவும்.. சரி அது நல்லது தானே என்று சொல்லுகிறார்கள் சிலர். ஆனால் அதனால் வரும் தீமையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் போது தலை முடி அதிகம் உதிர்கிறது. மேலும் கெட்டு போன தேங்காயும் சேர்க்கபப்டுவதால் வயிற்று உபாதைகளும் உண்டாகிறது.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

…..

3. சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் (அல்லது) கச்சா எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்தவேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் “சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்” என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்… அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால், இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன…??

நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால் மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்..

ரசாயன கலப்பு உரங்கள் சேர்க்காமல் இயற்கையான முறையில் மரச்செக்கு மூலம் ஆட்டபட்ட எண்ணெய்கள் வகைகள் எங்களிடம் கிடைக்கும்.

தொடர்புக்கு
அலைபேசி – 9789991578
இணைய தளம் – www.StandardColdPressedOil.com

….

Originally posted 2017-05-30 12:58:18.

Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.
Venkat I am the author of my life. Unfortunately, I am writing in pen and can’t erase my mistakes. My life is built on a series of choices that I’ve made. Being an author simply means you’re in charge of this present moment.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *